வடக்கு சிக்கிமில் சீன எல்லைக்கு அருகே பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 16 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்த ராணுவ லாரியில் 20 பேர் இருந்துள்ளனர். ஒரு திருப்பத்தில் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்ததாக கூறப்படுகிறது. வாகனம் 100 அடி உயரத்தில் இருந்து பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கியது. தகவல் கிடைத்ததும் அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த துயர சம்பவத்திற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் மற்றும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன், என்றார்.