திருப்பதி மலை அடிவாரம், ஸ்ரீவாரி மெட்டு ஆகிய பகுதிகளில் இருந்து திருமலைக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு நாளை முதல் 15 ஆயிரம் இலவச தரிசன டோக்கன்கள் மீண்டும் வழங்கப்பட உள்ளது.
கொரோனா பரவலுக்கு பின்னர் திவ்ய தரிசன டோக்கன் அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் பக்தர்களின் தொடர் வேண்டுகோளுக்கு இணங்க, நாளை முதல் நடந்து மலை ஏறி செல்லும் பக்தர்களுக்கு 15 ஆயிரம் டோக்கன்களை தினமும் வழங்க தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
நாளை அதிகாலை முதல் அலிப்பிரி வழியாக நடந்து செல்லும் பக்தர்களுக்கு தினமும் 10 ஆயிரம் டோக்கன்களும் ஸ்ரீவாரி மெட்டு பகுதி வழியாக நடந்து செல்லும் பக்தர்களுக்கு தினமும் 5 ஆயிரம் டோக்கன்களும் வழங்கப்பட உள்ளன.