நிஃபா வைரஸ் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வைரஸால் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுவன் உயிரிழந்ததாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்தார்.
கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் 14 வயது சிறுவன் ஒருவருக்கு நிஃபா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவருக்கு தனியார் மருத்துவமனையில் டாக்டர்கள் வென்டிலேட்டரில் சிகிச்சை அளித்தனர். ஆனால், இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை சிறுவன் சிறுநீர் கழிப்பதை நிறுத்தியதாகவும், சிறிது நேரத்தில் கடுமையான மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அமைச்சர் கூறினார். மருத்துவர்கள் சிறுவனை காப்பாற்ற முயன்றனர் ஆனால் அது பலனளிக்கவில்லை. இறுதிச்சடங்கு சர்வதேச தரத்தின்படி நடைபெறும். சிறுவன் உயிரிழந்ததால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி வருகின்றனர்.