india corona cases covid19

இந்தியாவில் புதிதாக 121 பேருக்கு கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,46,80,215 கோடியாக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,30,722 ஆக அதிகரித்துள்ளது. அதே சமயம் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 2,319 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 52 பேர் குணமடைந்துள்ள நிலையில், கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,41,47,174 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது, ​​நாட்டில் குணமடைந்தோர் விகிதம் 98.80 சதவீதமாக உள்ளது. நாடு தழுவிய தடுப்பூசி திட்டத்தின்படி பயனாளிகளுக்கு இதுவரை 220.14 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.