சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து அடுத்த கட்ட நகர்வாக புல்லட் ரயில் சேவைகளை வழங்க இந்திய ரயில்வே நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. இது மும்பை to அகமதாபாத் வழித்தடங்களில் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் வெளிநாடுகளில் கூட இல்லாத ரயில் சேவையை தொடங்க உள்ளதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது பூமிக்கு அடியில் மின்காந்த அலைகளின் உதவியுடன் மின்னல் வேகத்தில் பயணிகள் பயணம் செய்யும் ஹைப்பர் லூப் சேவையை தொடங்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்கான சோதனைகளை எலான் மஸ்கின் போரிங் நிறுவனம் சுரங்கம் அமைத்து மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை ஐஐடி ஏரோநாட்டிகல் மாணவர்களின் உதவியுடன் இத்திட்டத்தை சென்னை to பெங்களூரு மற்றும் சென்னை to புனே வழித்தடங்களில் செயல்படுத்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. இப்படி வியக்கத்தக்க போக்குவரத்து சேவை இன்னும் ஏழு முதல் எட்டு ஆண்டுக்குள் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளனர்.