உலகம்இந்தியா

உலக அளவில் தொழில்களில் புரளும் லஞ்சம் – இந்தியா 77வது இடம்..!

உலக நாடுகளில் 2020 ஆம் ஆண்டின் தொழில்களில் உள்ள லஞ்ச அபாய பட்டியலில் இந்தியா 45 மதிப்பெண்களுடன் 77வது இடத்தில் உள்ளது. சீனாவையும், பாகிஸ்தானையும் விட இந்தியா சிறப்பாக செயல்பட்டு உள்ளது இந்த தரவரிசையின் மூலம் தெரிய வந்துள்ளது.

லஞ்ச பட்டியல்:

லஞ்ச ஒழிப்பு தர நிர்ணய அமைப்பான TRACE, ஆண்டுதோறும் வணிகத்தில் நிலவும் லஞ்ச அபாய பட்டியல், நான்கு காரணிகளின் அடிப்படையில் 194 நாடுகளை பட்டியலிடுகிறது. அவை அரசாங்கத்துடன் வணிக தொடர்புகள், லஞ்ச ஒழிப்பு தடுப்பு மற்றும் அமலாக்கம், அரசு மற்றும் சிவில் சேவைகளில் உள்ள வெளிப்படைத்தன்மை மற்றும் சமூக ஊடகங்களின் பங்கு.

media handler 2

இந்த ஆண்டின் தரவுகளின்படி, வட கொரியா, துர்க்மெனிஸ்தான், தென் சூடான், வெனிசுலா மற்றும் எரிட்ரியா ஆகிய நாடுகளில் லஞ்ச ஆபத்து அதிகமாக உள்ளது. டென்மார்க், நார்வே, பின்லாந்து, சுவீடன் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் மிக குறைவான லஞ்ச ஆபத்தையே கொண்டுள்ளன. 2019 ஆம் ஆண்டில், இந்தியா 48 மதிப்பெண்களுடன் 78 வது இடத்திலும், 2020 ஆம் ஆண்டில் 45 மதிப்பெண்களுடன் நாடு 77 வது இடத்திலும் உள்ளது.

சீனா 126 வது இடத்தில் உள்ளது. லஞ்ச அபாயங்களின் பட்டியலில் இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் 153 வது இடத்தில் உள்ளது. பங்களாதேஷ் மற்றும் நேபாளத்தை விட இந்தியா சிறப்பாக செயல்பட்டுள்ளது. இந்தியாவை விட சிறந்த இடத்தைப் பிடித்த ஒரே அண்டை நாடு பூட்டான், இந்த பட்டியலில் 48 வது இடத்தில் உள்ளது.

loading...
Back to top button
error: Content is protected !!