விளையாட்டு

இந்தியா – ஆஸி., சிட்னி டெஸ்ட் – ஸ்மித் சதம்! 338 ரன்களுக்கு ஆல் அவுட்

இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி பேட்ஸ்மேன் தனது 27வது சதத்தை பதிவு செய்து அசத்தியுள்ளார். இவரது விக்கெட்டை வீழ்த்த இந்திய அணி பௌலர்கள் திணறிய நிலையில் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

இந்தியா vs ஆஸ்திரேலியா:

தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆஸ்திரேலியா அணியின் துவக்க ஆட்டக்காரர் வார்னர் 5 ரன்கள் எடுத்த நிலையில் தனது ஆட்டத்தை இழந்தார். அதன் பிறகு புகோவ்ஸ்கி மற்றும் லபூசான் இருவரும் ஜோடி சேர்ந்து ரன்கள் சேர்த்தனர். பிறகு ஆட்டம் மழையினால் பாதிக்கப்பட்டது.

மழை நின்ற பின் ஆட்டம் மீண்டும் துவங்கியது. புகோவ்ஸ்கி 62 ரன்கள் எடுத்த நிலையில் சைனி பந்தில் ஆட்டமிழந்தார். முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 166 ரன்கள் குவித்து 2 விக்கெட்டை இழந்தது. முதல் நாளில் இந்திய அணியின் பீல்டிங் மிகவும் மோசமாக இருந்தது. ஆட்டத்தின் இரண்டாம் நாளான இன்று தற்போது போட்டி துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலிய அணி மிக சிறப்பாக பேட்டிங் செய்து வருகின்றது. ஸ்மித் மற்றும் லபூசான் ஜோடி 100 ரன்களை சேர்த்த நிலையில் லபூசான் 91 ரன்களில் தனது ஆட்டத்தை இழந்தார். அதன் பிறகு வந்த பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை. இந்திய அணி சார்பில் ஜடேஜா மிக அருமையாக பந்துவீசி வருகிறார்.

ஸ்மித் சதம்:

வேட் 13 ரன்கள், கிறீன் 0, கேப்டன் பெயின் 1, கம்மின்ஸ் 0, ஸ்டார்க் 24, லியோன் 0 என்று வரிசையாக பெவிலியன் திரும்பினர். ஆனால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மித் டெஸ்ட் வரலாற்றில் தன் 27வது சதத்தை பதிவு செய்து அசத்தினார். இந்தியாவிற்கு எதிராக இவரது 8வது சதம் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது விக்கெட்டை வீழ்த்துவதற்கு இந்திய அணி பௌலர்கள் எடுத்த முயற்சி அனைத்தும் வீணானது. முடிவில் ஸ்மித் ஜடேஜாவால் அபாரமாக ரன் அவுட் செய்யப்பட்டு தனது விக்கெட்டை இழந்தார். இவர் 131 ரன்களில் தனது ஆட்டத்தை இழந்துள்ளார்.

இந்திய அணி சார்பில் அபாரமாக பந்து வீசிய ஜடேஜா 4 விக்கெட், சைனி மற்றும் பும்ராஹ் 2, சிராஜ் 1 விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர். அஸ்வின் இந்த போட்டியில் விக்கெட் எடுக்காதது ஏமாற்றமே. முடிவில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 338 ரன்களை குவித்துள்ளது. தற்போது இந்தியா அணி சார்பில் ரோஹித் சர்மா மற்றும் சுப்மங் கில் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கியுள்ளனர்.

லைவ் ஸ்கோர்:

ஆஸ்திரேலியா- 338\10

இந்தியா -1 ரன்
ரோஹித் – 1
கில் -0

Back to top button
error: Content is protected !!