விளையாட்டு

IND vs SL; 2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி.. வெற்றியை கைப்பற்றுமா இந்தியா..

இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது. இரு அணிகள் இடையே 3ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் கொழும்புவில் நடைபெற்று வருகிறது.

முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இதனை அடுத்து இரு அணிகள் மோதும் 2வது போட்டி இன்று பிற்பகல் 3 மணிக்கு பிரேமதாசா மைதானத்தில் நடைபெறுகிறது.

முதல் ஆட்டத்தில் தோற்றதற்கு பதிலடி கொடுக்க இலங்கை அணியும், 2வது ஆட்டத்திலும் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியாவும் இருப்பதால் இந்த ஆட்டம் மிகுந்த விறுவிறுப்பாக இருக்கும் என்று கிரிக்கெட் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: