உலகம்

பிரேசிலில் கொரோனாவால் அதிகரிக்கும் குழந்தைகளின் இறப்பு..!

பிரேசில் நாட்டில் 500 குழந்தைகள், 800-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கொரோனா பாதிப்புக்கு இறந்துவிட்டதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் கூறுகிறது.

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரேசிலும் ஒன்று. அங்கு கொரோனா தொற்று வீரியமாக தொடர்ந்து பரவுகிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 80,529 பேர் புதிதாக கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன்மூலம் மொத்த பாதிப்பு 1 கோடியே 37 லட்சத்து 58 ஆயிரத்து 93 ஆக அதிகரித்து இருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 3,774 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டின் கொரோனா பலி எண்ணிக்கை 3.65 லட்சத்தை கடந்து விட்டது. பலி எண்ணிக்கையில் பிரேசில் நாடு தொடர்ந்து 2-வது இடத்தில் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அதிக குழந்தைகள் பலி

மேலும் பிரேசிலில் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றனர். இதுவரை சுமார் 500 பச்சிளங்குழந்தைகள் மற்றும் 9 வயதிற்குட்பட்ட 800-க்கும் மேற்பட்ட சிறுவர்-சிறுமிகள் கொரோனா பாதிப்புக்கு இறந்துவிட்டதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் கூறுகிறது.

ஆனால் உண்மையான இறப்பு எண்ணிக்கை இதைவிட அதிகம் என்கின்றனர் நிபுணர்கள். சாவோ பாலோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டாக்டர் பாத்திமா மரின்ஹோ கூறுகையில், 1,302 பச்சிளங்குழந்தைகள் உட்பட 9 வயதிற்குட்பட்ட 2,060 சிறுவர் – சிறுமிகள் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக கூறியுள்ளார்.

குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட குறைவான வாய்ப்பே இருப்பதாக நிலவும் கருத்து தவறானது எனவும் பாத்திமா மரின்ஹோ தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: