இந்தியா

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – கேரள மாநிலத்தில் முழு ஊரடங்கு!!

கேரள மாநிலத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகமாக வாய்ப்புள்ளதால் மீண்டும் வார இறுதி பொதுமுடக்கத்தை அமல்படுத்த மாநில அரசு முடிவெடுத்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் எனும் கோவிட்-19 தொற்று, கடந்த ஆண்டு முதல் பரவி ஏகப்பட்ட மக்களின் உயிரை காவு வாங்கியது. இதை தடுக்க, பரவலாக எல்லா இடங்களிலும், தொற்றின் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு, பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு வந்தது. இதனை அடுத்து பயன்பாட்டுக்கு வந்த கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் வி போன்ற தடுப்பூசிகளின் பயன்பட்டால் ஓரளவு தொற்று கட்டுப்படுத்தப்பட்டது. இதற்கிடையில் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து “டெல்டா மற்றும் டெல்டா பிளஸ்” என தீவிரத்துடன் பரவி பீதியை ஏற்படுத்தி வந்தது.

எனவே மீண்டும் முழு பொதுமுடக்கத்தை மாநில முதல்வர்கள் அமல்படுத்தி வந்தனர். மேலும், தடுப்பூசிகள் செலுத்துவதையும் அதிகப்படுத்தினர். இந்த நிலையில் நமது அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் பல்வேறு தளர்வுகளுடன் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு ஒரு மாதத்திற்கு ஞாயிற்றுக்கிழமை மட்டும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. எனினும், அத்தியாவசிய கடைகள் திறக்கவும், வாகனங்கள் இயங்கவும் கூடுதல் தளர்வுகளை முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் மாநிலத்தில் சில தினங்களுக்கு முன் கொண்டாடப்பட்ட ஓணம் மற்றும் சுதந்திர தின நிகழ்வுகளால் கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டு, மக்கள் பொது இடங்களில் அளவுக்கு அதிகமாக கூடினர். இதனால், தொற்று பரவல் வாய்ப்பு என்பது உருவாகியுள்ளதாக மாநிலத்தின் நிபுணர் குழு அறிவித்தது. இந்த அறிவிப்பை அடுத்து நாளை அதாவது, 29ந் தேதி மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கை அமல்படுத்தப்படுகிறது. எனவே அவசியம் இன்றி வெளியில் சுற்றி திரிவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாநில அரசு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: