தமிழகத்தில் சென்னை ஐஐடியில் இதுவரை 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மக்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் அறிவுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு முதல் கொரோனா என்னும் கொடிய வகை வைரஸ் தொற்று தீவிரமாக பரவி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதனை கட்டுப்படுத்த மத்திய சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலின் பேரில் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து மக்கள் மீண்டு வர முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்த தாக்குதலாக கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உருமாற்றம் அடைந்த டெல்டா பிளஸ் வைரஸ் வேகமெடுக்க தொடங்கியது. இந்த வைரஸ் எதிர்பாராத அளவு பாதிப்புகளை அதிகப்படுத்தியது.
இந்த நேரத்தில் தடுப்பு பணியின் ஒருபகுதியாக 15 வயது முதல் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து உருமாற்றம் அடைந்த ஓமிக்ரான் வைரஸ் மூன்றாம் அலை பாதிப்புகளை ஏற்படுத்த தொடங்கியது. பெரும் முயற்சியின் விளைவாக இந்த வைரஸ் தொற்றில் இருந்து மக்கள் மீண்டு வந்து கொண்டிருக்கும் நேரத்தில் தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்திலும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. சென்னை ஐஐடியில் இதுவரை 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் பொது இடங்களுக்குச் செல்லும் போது கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh