தமிழ்நாடு

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா.. கட்டுப்பாட்டு பகுதிகள் 800-ஆக அதிகரிப்பு..!

தமிழகத்தில் மற்ற மாவட்டங்களைக் காட்டிலும் சென்னையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. சென்னையில் மட்டும் 800-க்‍கும் மேற்பட்ட தெருக்‍கள் கட்டுபாட்டு பகுதிகளாக அறிவிக்‍கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் ஒரு தெருவில் மூன்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் அப்பகுதி கட்டுப்பாடு பகுதியாக அறிவிக்கப்பட்டு அத்தெரு மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகின்றனர்.

அந்த வகையில் சென்னையில் 400-ஆக இருந்த கட்டுப்பாட்டு பகுதிகள் தற்போது இரு மடங்காக அதிகரித்துள்ளன. 826 தெருக்கள் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அதேநேரம் கடந்த ஆண்டு இருந்தது போல கட்டுப்பாடு பகுதிகள் முடக்கப்படுவது இல்லை என்றும், லேசான பாதிப்பு உள்ளவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு வருவதாகவும், அவர்களுக்கு சுகாதார பணியாளர்களின் கட்டுப்பாட்டில் செயல்படும் தன்னார்வலர்கள் உதவி செய்து வருகிறார்கள் என்றும் மாநகராட்சி கூறியுள்ளது.

சென்னையில் தேனாம்பேட்டையில் தொற்று பாதிப்பு அதிகம் உள்ளதாகவும், அங்கு அதிகமான கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளதாகவும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:  தெற்கு ரயில்வேயில் சூப்பரான வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: