தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு நேரம் அதிகரிப்பு – மாநில தேர்தல் ஆணையம்!!

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு தற்போது கொரோனா காலமாக இருப்பதால் கூடுதலாக இரண்டு மணி நேரம் அதிகரிக்கப்படுவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில், கடந்த 2019ல் உள்ளாட்சி தேர்தல் நடந்தது. அப்போது, புதிதாக பிரிக்கப்பட்ட வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களின் எல்லைகள் பிரிக்கவில்லை. இதனால் அப்போது இந்த 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை. விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் செப்டம்பர் 15ம் தேதிக்குள் நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ள ஒன்பது மாவட்டங்களில் உள்ள வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு விட்டது. இந்த பட்டியல் கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்காளர் பட்டியலை வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் ஆகஸ்ட் 31ம் தேதி வெளியிடப்பட்டது. தற்போது தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தல் குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள்ளது.

அதன்படி, தேர்தலில் வாக்களிப்பவர்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக உடல் வெப்ப பரிசோதனை போன்றவை அவசியமாகும். இதுபோன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளதால் வாக்குப் பதிவு நேரமான 10 மணி நேரத்தை 12 மணியாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு பஞ்சாயத்து (தேர்தல்கள்) விதிகளில் மாற்றம் செய்து உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு நாளில் காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை வாக்குப்பதிவு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  செப்.30ம் தேதி ஆட்சியர் அலுவலக முற்றுகை போரட்டம் – விவசாய சங்கங்கள் அறிவிப்பு!!
Back to top button
error: