பெட்ரோல், டீசல் உயர்வையடுத்து சென்னையில் ஓலா மற்றும் ஊபர் நிறுவனங்கள், தங்களது வாடகைக் கட்டணத்தை உயர்த்தியுள்ளன.
வாகன எரிபொருள் விலை உயர்வு காரணமாக, ஓலா மற்றும் உபெர் நிறுவனங்கள், மும்பை, கொல்கத்தா மற்றும் டெல்லியில் வாடகை கட்டணத்தை உயர்த்தின. இதைதொடர்ந்து சென்னையிலும் அந்நிறுவனங்கள் கட்டணத்தை 10 முதல் 14 சதவீதம் வரை உயர்த்தியுள்ளன.
இதன்படி சென்னையில் பயணிக்கும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 2 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை உயர்வின் பாதிப்பில் இருந்து ஓட்டுநர்கள் மீண்டு வருவதற்கே இந்த கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஓலா மற்றும் ஊபர் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh