இந்தியா

அரசு ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு? அகவிலைப்படி 31 ஆக உயர்வு!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த ஆண்டு முதல் நிலுவையில் வைத்திருந்த அகவிலைப்படி கடந்த மாதம் முதல் வழங்கப்பட்டுள்ள நிலையில், ஊழியர்களுக்கான அடுத்த DA உயர்வு விரைவில் வர இருக்கிறது.

மத்திய அரசு கடந்த 2020 ஜனவரி முதல் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கான DA மற்றும் DR உயர்வை கொரோனா பெருந்தொற்று காரணமாக நிறுத்தி வைத்திருந்தது. இறுதியாக ஊழியர்கள் 17% அகவிலைப்படியை பெற்று வந்தனர். ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள DA உயர்வை வழங்குவதற்கு மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் முதல் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில், ஜூலை 1, 2021 முதல் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு வழங்குவதாக மத்திய அரசு அறிவித்தது. மேலும், இந்த உத்தரவு ஜூலை மாதம் முதலே அமலுக்கு வருவதாகவும் அறிவித்தது.

பொதுவாக வருடத்திற்கு இரண்டு முறை DA உயர்த்தப்படுகிறது. அந்த வகையில் கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட 11% DA உயர்வானது ஆனது ஜனவரி 2020 முதல் ஜனவரி 2021 வரையிலான காலத்திற்கு ஆகும். 2021 ஜூலை காலத்திற்கான டிஏ உயர்வை மத்திய அரசு இன்னும் அறிவிக்கவில்லை. AICPI அளித்துள்ள தகவலின் படி, விரைவில் ஊழியர்களுக்கான 2021 ஜூலை மாத காலத்திற்கான DA விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மேலும், DA 3% மேலும் உயர்த்தப்படும், என்பதால் மத்திய அரசு ஊழியர்களுக்கான DA 28% லிருந்து 31% ஆக அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் 7 வது ஊதியக் குழுவின் சம்பள மேட்ரிக்ஸின் படி, மத்திய அரசின் முதல் நிலை ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.18,000 ஆகும். அதிகபட்ச ஊதியம் ரூ.56,900 ஆகும். அதிகபட்ச ஊதியம் பெறுபவர்கள் தற்போதைய 28% DA உயர்வில் மாதம் ரூ.15,932 பெறுகிறார்கள். 31% DA உயர்வின் படி, அவர்கள் கூடுதலாக ஆண்டுக்கு ரூ.20,484 பெற முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

  வைஷ்ணவி தேவி கோயிலில் நிகழ்ந்த விபத்து.. நிவாரணம் அறிவிப்பு!!
Back to top button
error: