தமிழ்நாடு

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கல் – போராட்டம் அறிவிப்பு!!

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உடனடியாக வழங்க கோரி ஆகஸ்ட் 16, 17 ஆகிய தேதிகளில் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றும் போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளதாக வருவாய்த் துறையின் மாநில பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற நாள் முதல் துறை வாரியாக ஆய்வு மேற்கொண்டது. அதன் பிறகு முதல்வர் முக ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அதற்கடுத்து கடந்த 4-ந் தேதி அமைச்சரவை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் ஆகஸ்ட் 13ம் தேதி சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, முதன் முறையாக இ – பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிதிநிலை அறிக்கையில் துறைவாரியான நிதி ஒதுக்கீடு, மாநிலத்தின் வளர்ச்சிக்கு தேவையான அறிவிப்புகள் இடம் பெற்றது.

மேலும் தமிழகத்தில் முதல் முறையாக வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசின் நிதிநிலை அறிக்கையில் அரசு ஊழியர்களுக்கான அறிவிப்புகள் இடம் பெறாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அகவிலைப்படி தொடர்பான அறிவிப்புகள் இல்லாதது பெரும் ஏமாற்றத்தை அளித்திருப்பதாக தமிழ்நாடு வருவாய்த்துறை மாநிலப் பொதுச் செயலாளர் எம்.பி.முருகையன் தெரிவித்துள்ளார். மேலும் தமிழக அரசு, மத்திய அரசு ஜூலை 2021, ஜூலை 1 முதல் வழங்கிய அகவிலைப்படியை நிறுத்தம் செய்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

அதனால் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உடனடியாக வழங்க கோரி ஆகஸ்ட் 16, 17 ஆகிய தேதிகளில் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றும் போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளதாக வருவாய்த் துறையின் மாநிலப் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் 16.08.2021 அன்று ஆர்ப்பாட்டம் செய்யவுள்ளனர். இதில் வருவாய்த்துறை அலுவலர்கள் பங்கேற்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:  அடுத்த 4 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் கனமழை – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: