இந்தியா

2022ல் ஊழியர்களின் சராசரி சம்பள உயர்வு 8.6% ஆக அதிகரிப்பு!!

வரும் 2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் செயல்பட்டு வரும் பல்வேறு துறைகள் தங்களது ஊழியர்களுக்கு அதிகளவு ஊதியத்தை உயர்த்த திட்டமிட்டிருப்பதாகவும், ஊழியர்களின் சராசரி சம்பள உயர்வு 8.6%ஆக இருக்கும் எனவும் ஆய்வு அறிக்கை கூறுகிறது.

இந்தியாவில் காணப்பட்டு வரும் கொரோனா தொற்று நோய் சூழலுக்கு மத்தியிலும் பல்வேறு நிறுவனங்களில் புதிய வேலைவாய்ப்புகள், ஊதிய உயர்வு கணிசமாக உயர்ந்து வருகிறது. அதிலும் குறிப்பாக அடுத்து வர இருக்கும் 2022 ஆம் ஆண்டில் ஊழியர்களின் சராசரி சம்பள உயர்வு 8.6% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு என்பது இந்தியாவில் மேம்பட்டு வரும் வணிக நம்பிக்கையால் தூண்டப்படுகிறது என்று டெலாய்ட் பணியாளர் மற்றும் அதிகரிப்பு கணக்கெடுப்பு கூறுகிறது.

இந்த அதிகரிப்புகள் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏற்பட்ட தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளுடன் பொருந்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது கணக்கெடுக்கப்பட்ட நிறுவனங்களில் நான்கில் ஒரு பங்கு, தனது ஊழியர்களுக்கு இரட்டை இலக்க உயர்வை கணித்துள்ளது. அந்த வகையில் 2021 ஆம் ஆண்டில் 92% நிறுவனங்கள் சராசரியாக 8% உயர்வை அளித்துள்ளது. இந்த எண்ணிக்கை 2020ல் 4.4% மாக இருந்தது. கடந்த ஆண்டு 60% நிறுவனங்கள் மட்டுமே ஊதிய உயர்வை நீட்டித்துள்ளன. இதற்கிடையில் டெலாயிட் 7 துறைகள் மற்றும் 24 துணைத் துறைகளை சேர்ந்த 450க்கும் மேற்பட்ட நிறுவனங்களை சமீபத்தில் ஆய்வு செய்தது.

அந்த ஆய்வு அறிக்கை தொடர்பாக டெலாயிட் டச் டோமாட்சு நிறுவனத்தின் இந்திய பங்குதாரர் ஆனந்தோருப் கோஸ் கூறுகையில், ‘கடந்த 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2022 இல் பெரும்பாலான நிறுவனங்கள் ஊதிய அதிகரிப்பை திட்டமிட்டன. ஆனால் கொரோனா தொற்றுக்கு மத்தியில் ஊதிய உயர்வு மீதான நிச்சயமற்ற நிலை உருவாகியுள்ளது. மேலும் தற்போது உருவான கொரோனா 2ம் அலை, 2021-22 நிதியாண்டிற்கான GDP கணிப்புகள் ஆகியவற்றில் சில மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். இருந்தாலும் IT துறை அதிக ஊதிய உயர்வை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் சில டிஜிட்டல், இ-காமர்ஸ் நிறுவனங்களும் ஊழியர்களுக்கு அதிகபட்ச இன்கிரிமென்ட் கொடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் சில்லறை, விருந்தோம்பல், உணவகங்கள், உள்கட்டமைப்பு மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் தங்கள் வணிக இயக்கத்திற்கு ஏற்ப ஊழியர்களுக்கான மிகக் குறைந்த ஊதிய உயர்வுகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றன. மேலும் சினிமா உலகில் 1.8 மடங்கு ஊதிய அதிகரிப்புகளை சிறந்த நடிகர்கள் எதிர்பார்க்கலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது’ என குறிப்பிட்டுள்ளார்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  பெங்களூரில் அக்டோபர் 11 வரை இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு – காவல் ஆணையர் அறிவிப்பு!!
Back to top button
error: