தமிழ்நாடுமாவட்டம்

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கிலும் ரெயில்கள் வழக்கம்போல் இயங்கும்..!

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கிலும் ரெயில்கள் வழக்கம்போல் இயங்கும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால், இன்று முதல் இரவு நேர ஊரடங்கு விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த நேரத்தில் தனியார், பொது பேருந்து போக்குவரத்து, வாடகை ஆட்டோ, டாக்சி மற்றும் தனியார் வாகனத்திற்கு அனுமதி கிடையாது.

இதனால் பகலில் கூடுதல் அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வெளி மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகள் இரவு 10 மணிக்குள் அந்தந்த மாவட்டங்களை சென்று சேரும் வகையில் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

அதே நேரத்தில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தாலும் ரெயில்கள் வழக்கம்போல் இயங்கும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. அனைத்து பகுதிகளிலும் ரெயில்கள் முழுமையாக இயக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

ரெயில்நிலையம் செல்ல மட்டும் வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகத்திற்கு தமிழகம் அனுமதி வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: