தமிழ்நாடுமாவட்டம்

தமிழகத்தில் 1,71, 13, 202 பேர் வாக்களிக்கவில்லை..

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கு நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவில் 72.78 சதவீத வாக்குகள் பதிவாகின. அதில் சென்னையில் மிகக் குறைவாக 59.06 சதவீத வாக்குகளும், அதிகப்பட்சமாக கரூரில் 83.92 சதவீத வாக்குகளும் பதிவாகின. தமிழகத்தில் மொத்தம் 6,28,69,955 வாக்காளர்கள் உள்ளனர்.

இதில் ஆண் வாக்காளர்கள் 3,09,23,651 பேரும், பெண் வாக்காளர்கள் 3,19,39,112 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 7,192 பேரும் உள்ளனர். தமிழகம் முழுவதும் 6.28 கோடி வாக்காளர்கள் இருந்தும் நேற்று முன்தினம் 72.78 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர்.

அதன்படி பார்த்தால் தமிழகத்தில் 4 கோடியே 57 லட்சத்து 56 ஆயிரத்து 753 பேர் வாக்களித்துள்ளனர். 1 கோடியே 71 லட்சத்து 13 ஆயிரத்து 202 பேர் – அதாவது 27.22 சதவீதத்தினர் வாக்களிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

மாவட்டம் வாரியாக பதிவான வாக்கு சதவீதம்

சென்னை – 59.06
திருவள்ளூர் – 70.56
காஞ்சிபுரம் – 71.98
வேலூர் – 73.73
கிருஷ்ணகிரி – 77.30
தர்மபுரி – 82.35
திருவண்ணாமலை – 78.62
விழுப்புரம் – 78.56
சேலம் – 79.22
நாமக்கல் – 79.72
ஈரோடு – 77.07
நீலகிரி – 69.68
கோவை – 68.70
திண்டுக்கல் – 77.13
கரூர் – 83.92
திருச்சி – 73.79
பெரம்பலூர் – 79.09
கடலூர் – 76.50
நாகப்பட்டினம் – 75.48
திருவாரூர் – 76.53
தஞ்சாவூர் – 74.13
புதுக்கோட்டை – 76.41
சிவகங்கை – 68.94
மதுரை – 70.33
தேனி – 71.75
விருதுநகர் – 73.77
ராமநாதபுரம் – 69.60
தூத்துக்குடி – 70.20
நெல்லை – 66.65
கன்னியாகுமரி – 68.67
அரியலூர் – 82.47
திருப்பூர் – 70.12
கள்ளக்குறிச்சி – 80.14
தென்காசி – 72.63
செங்கல்பட்டு – 68.18
திருப்பத்தூர் – 77.33
ராணிப்பேட்டை – 77.92
மொத்தம் – 72.78

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: