
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கபட்டோர் எண்ணிக்கை 17 ஆயிரத்து 355 ஆக உயர்ந்தது.
கொரோனா பரவால் அதிகரிப்பதால், நாகர்கோவில் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையங்களில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, சுகாதாரத் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.