இந்தியா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,143- பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12 ஆயிரத்து 143- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 11,395- பேர் குணம் அடைந்துள்ளனர். ஒரே நாளில் 103- பேர் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 08 லட்சத்து 92 ஆயிரத்து 746- ஆக உள்ளது. இதுவரை கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 06 லட்சத்து 625 ஆக உள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 55 ஆயிரத்து 550- ஆக உள்ளது. தொற்றுடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 571- ஆக உள்ளது. நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் எண்ணிக்கை 79 லட்சத்து 67 ஆயிரத்து 647- ஆக உள்ளது.

Back to top button
error: Content is protected !!