இந்தியா

டெல்லியில் வாகன ஓட்டிகளுக்கு இனி லைசென்ஸ் கையில் எடுத்துச் செல்ல தேவையில்லை!!

டெல்லியில் வாகன ஓட்டிகள் இனி தங்களது லைசென்ஸ் மற்றும் ஆவணங்களின் சான்றுகளை கையில் வைத்திருக்க தேவை இல்ல என்று அரசு புதிய நடைமுறையை அறிவித்துள்ளது.

இந்தியாவில் ஓட்டுநர் உரிமம் சாலைகளில் பல்வேறு வகையான மோட்டார் வாகனங்களை இயக்குவதற்கு அனுமதி அளிக்கும் ஒரு ஆவணமாகும். போக்குவரத்துதுறை அதிகாரிகளால் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படுகிறது. சாலைகளில் வாகனத்தை செலுத்தும் எந்த நபரும் இந்தியாவில் ஓர் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் வைத்திருப்பது கட்டாயமாகும். இந்த சட்டத்தை மீறினால் காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள். தவிர்க்க முடியாத வேளைகளில் நம்முடைய ஓட்டுநர் உரிமத்தை மறந்து விட்டு வாகனத்தை ஓட்டினால் பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.

தற்போது டெல்லி அரசு வாகன ஓட்டிகளுக்கான புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. அதன்படி, டெல்லியில் வாகன ஓட்டிகள் எப்போதும், ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி போன்றவற்றை கையில் வைத்திருக்க தேவையில்லை. அதற்கு பதிலாக, இந்த சான்றுகளை டிஜி- லாக்கர் அல்லது எம்- பரிவாஹன் போன்ற ஆப்களில் சேமித்துக் கொள்ளும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. தேவையான சந்தர்ப்பத்தில் இவற்றை காவல்துறையினரிடம் ஆவணமாக பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான டெல்லி அரசின் அறிவிப்பில், தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 விதிகளின் படி, அரசு அறிவித்துள்ள ஆவணங்கள் அசல் ஆவணங்களுக்கு இணையாக கருதப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மற்றும் அமலாக்க பிரிவு காவல்துறையினர் இந்த ஆவணங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி வேறு எந்த வடிவத்தில் இருந்தாலும் அவை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  அரசு அலுவலகங்களில் சேவைகள் தாமதமானால் அபராதம், பணிநீக்கம் – ஹரியானா மாநில அரசு அதிரடி!!!
Back to top button
error: