தமிழ்நாடு

பத்திரப்பதிவு முறைகேடு நடந்தால் 3 ஆண்டுகள் சிறை – அமைச்சர் அறிவிப்பு!!

தமிழகத்தில் பத்திரப்பதிவில் முறைகேடு செய்தால் 3 ஆண்டுகள் சிறையில் அடைக்க சட்டம் கொண்டு வரப்படும் என வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் அவர்கள் எச்சரித்து உள்ளார்.

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்த காரணத்தால் பத்திரப்பதிவு அலுவலகங்கள் மூடப்பட்டிருந்தது. கொரோனா தாக்கம் குறைந்து வரும் நிலையில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இயங்கி வருகிறது. மதுரை தெற்குவாசல் பகுதியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் அமைச்சர் பி.மூர்த்தி ஆய்வு மேற்கொண்ட போது இடைத்தரகர் இல்லாமல் உரிய கட்டணம் பெற்று பத்திரப்பதிவு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்று முறைகேட்டில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியிருந்தார்.

அதனை தொடர்ந்து தற்போது கடந்த அதிமுக ஆட்சியில் பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்கள் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளன. 2016 முதல் 2021 வரை பத்திரப்பதிவு துறையில் வெளிப்படையாகவே முறைகேடுகள் நடந்துள்ளன எனவும் கூறிய அவர், முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன என்று தெரிவித்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்துவதற்காக உயர்நிலைக்குழு அமைக்கப்படும் எனவும் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

மேலும் அடுத்த ஆறு மாதத்திற்குள் பத்திரப்பதிவு நடைமுறைகள் எளிமையாக்கப்படும் என்றும் பத்திரப் பதிவில் முறைகேடாக பதிவு நடந்தால் சார்பதிவாளர் உள்ளிட்டோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க மசோதா கொண்டு வரப்படும் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். அதனை தொடர்ந்து முறைகேட்டில் தொடர்புடையை பிற துறையை சேர்ந்தவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மூர்த்தி கூறினார்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் – சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!!
Back to top button
error: