தமிழ்நாடு

தனியார் பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு – 85% கல்வி கட்டண வசூல்!!!

தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட வழக்குக்கு, தனியார் பள்ளி மாணவர்களது 85% கல்விக்கட்டணத்தை, 6 தவணைகளாக பிரித்து வசூலிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு மத்தியில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனிடையே தமிழகம் முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பொது மக்கள் சந்தித்து வரும் நிதி தொடர்பான சிக்கல்களை கருத்தில் கொண்டு தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடம் குறைந்த அளவு கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அந்த வகையில் தனியார் பள்ளிகள் அனைத்தும் 85% கட்டணத்தை 6 தவணைகளாக வசூலிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் வசூலிப்பது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையை தொடர்ந்து தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களது பெற்றோர்கள் வருமானம் பாதிக்கப்படாதவர்களாக இருந்தால் அவர்களிடம் 85% கட்டணத்தையும், வேலை வாய்ப்பை இழந்த பெற்றோரிடம் இருந்து 75% கட்டணத்தை வசூலிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் படி அரசு ஊழியர்கள், தொழிலதிபர்கள் ஆகிய பெற்றோரிடம் இருந்து 85% கல்வி கட்டணத்தை 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி வரை ஆறு தவணைகளாக வசூலித்துக் கொள்ளலாம்.

அதே போல கொரோனாவால் பொருளாதாரத்தை இழந்த பெற்றோர்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகளிடம் அனுமதி பெற்று, அரசு அறிவித்த 75% கட்டணத்தை 6 தவணைகளாக செலுத்தலாம் என பள்ளிக்கல்வித்துறை ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும் கட்டணம் தொடர்பான காரணங்கள் நிமித்தமாக எந்தவொரு மாணவர்களையும் பள்ளிகளில் இருந்து வெளியேற்ற கூடாது என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே CBSE பள்ளிகளின் கட்டண விவரங்களை 4 வாரத்திற்குள் இணையதளத்தில் வெளியிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:  காவல் நிலையங்களுக்கு முக்கிய உத்தரவு பிறப்பிப்பு – டிஜிபி அறிவிப்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: