தமிழ்நாடு

அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பேறுகால விடுப்பு அரசாணை விளக்கம்!!

தமிழகத்தில் அரசு ஊழியர்களின் பேறுகால விடுப்பை 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தி வழங்கப்பட்ட அரசாணை குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு அரசு பல்வேறு சலுகைகளை அளிக்கிறது. அதன்படி 2022ம் ஆண்டு முதல் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும் என்று சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. மேலும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து பழைய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

மேலும் அரசு பெண் ஊழியர்களுக்கு பேறுகால காலத்திற்கு பின் ஊதியத்துடன் 9 மாதம் விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் அவர்கள் தன்னையும், குழந்தையையும் கவனித்து கொள்ள முடிகிறது. இந்த 9 மாத விடுப்பானது போதுமானதாக இல்லை என்று கருத்துக்கள் முன் வைக்கப்பட்டது. அதனால் திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்தவுடன் 9 மாதமாக உள்ள பேறுகால விடுமுறை 12 மாதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அரசாணை வெளியிடப்பட்டது.

இது குறித்து தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு அவர்கள் விளக்கமளித்துள்ளார். இந்த அரசாணை வெளியாவதற்கு முன்பே 9 மாத பேறுகால விடுப்பில் சென்றவர்களும், 12 மாத பேறுகால விடுப்பிற்கு தகுதி உடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 9 மாத கால விடுப்பு முடிந்தும், பணிக்கு திரும்பாமல் விடுப்பில் உள்ளவர்களுக்கு, அது பணி நாளாகவே கருதப்படும் என்றும், முன்னர் விடுப்பில் சென்று, பணிக்கு திரும்பாத அனைவருக்கும் 12 மாத கால பேறுகால விடுப்பு பொருந்தும் என்றும் தெரிவித்துள்ளார்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  தங்கம் விலை சவரனுக்கு ரூ.176 சரிவு!
Back to top button
error: