தமிழ்நாடு

அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பணிக்கு வருவதில் விலக்கு!!

தமிழக அரசு பணியாளர்களாக கொரோனா பரவல் அதிகமுள்ள 11 மாவட்டங்களில் பணிபுரியும் மாற்றுத்திறனாளி ஊழியர்கள் ஜூலை 4 ஆம் தேதி வரை அலுவலகங்களுக்கு வர தேவையில்லை என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா பெருந்தொற்று காலத்தில்‌ மாற்றுத்‌ திறனாளி அரசுப்‌ பணியாளர்களின்‌ பாதுகாப்பினைக்‌ கருத்தில் கொண்டு 27.06.2021 வரை சென்னை, திருவள்ளுர்‌, காஞ்சிபுரம்‌ மற்றும்‌ செங்கல்பட்டு மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில்‌ பணிபுரியும்‌ மாற்றுத்‌ திறனாளி அரசுப்‌ பணியாளர்கள்‌ அலுவலகத்திற்கு வருவதிலிருந்து முழுவதுமாக விலக்களித்து அரசு ஆணையிட்டுள்ளது.

மேலும் மாநிலம்‌ முழுவதும்‌ கொரோனா பெருந்தொற்றினை கட்டுப்படுத்தும்‌ நோக்கில்‌ குறிப்பிட்ட தளர்வுகளுடன்‌ கூடிய ஊரடங்கானது 05.07.2021 காலை 6.00 மணி வரை நீட்டித்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும்‌, இவ்வரசாணையில்‌ கொரோனா தொற்று பாதிப்பின்‌ அடிப்படையில்‌ மாவட்டங்கள்‌ மூன்று வகையாக வகைப்படுத்தப்பட்டு வகை 1-ல்‌ உள்ள கோயம்புத்தூர்‌, நீலகிரி, திருப்பூர்‌, ஈரோடு. சேலம்‌, கரூர்‌, நாமக்கல்‌, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌ மற்றும்‌ மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில்‌ அத்தியாவசிய துறைகள்‌ தவிர்த்து பிற அரசு துறைகள்‌ 50% பணியாளர்களுடன்‌ செயல்பட ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாற்றுத்‌ திறனாளிகள்‌ நல இயக்குநர் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். மாற்றுத்‌ திறனாளி அரசுப்‌ பணியாளர்களின்‌ பாதுகாப்பினை கருத்தில் கொண்டு மேற்படி ஊரடங்கு காலகட்டத்தில்‌ வகை 1-ல்‌ குறிப்பிடப்பட்டுள்ள கோயம்புத்தூர்‌, நீலகிரி, திருப்பூர்‌, ஈரோடு, சேலம்‌, கரூர்‌, நாமக்கல்‌, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌ மற்றும்‌ மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில்‌ மாற்றுத்‌ திறனாளிகள்‌ நலத்துறை மற்றும்‌ பிற துறைகளில்‌ பணிபுரியும்‌ மாற்றுத்திறனாளி அரசுப்‌ பணியாளர்கள்‌ 04.07.2021 வரை அலுவலகத்திற்கு வருவதிலிருந்து முழுவதுமாக விலக்கம் வழங்கப்பட வேண்டும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மாற்றுத்திறனாளிகள்‌ நல இயக்குநரின்‌ கருத்துருவினை கவனமாக பரிசீலித்த பின்னர்‌ அரசானது, கோயம்புத்தூர்‌, நீலகிரி, திருப்பூர்‌, ஈரோடு, சேலம்‌, கரூர்‌, நாமக்கல்‌, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌ மற்றும்‌ மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில்‌ மாற்றுத்‌ திறனாளிகள்‌ நலத்துறை மற்றும்‌ பிற அரசுத்‌ துறைகளில்‌ பணிபுரியும்‌ மாற்றுத்‌ திறனாளி அரசுப்‌ பணியாளர்கள்‌ 28.06.2021 முதல்‌ 04.07.2021 வரை அலுவலகத்திற்கு வருவதிலிருந்து முழுவதுமாக விலக்களித்து தற்போது அரசாணை வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: