தமிழ்நாடு

SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – டெபிட் கார்டு மூலம் கடன் உதவி!!

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் டெபிட் கார்டு மூலமாக 8000 ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்று அதற்கு டெபிட் கார்டு மூலமாகவே ஈ.எம்.ஐ கட்டும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எஸ்பிஐ வங்கி தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு முக்கிய சேவைகளை வழங்கி வருகிறது. கடந்த மே மாதம் விதிக்கப்பட்ட ஊரடங்கின் போது எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் வங்கிகளுக்கு வருவதை தவிர்க்க டோர் ஸ்டெப் வங்கி சேவையை வழங்கியது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களுக்கு பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ குறைந்த வட்டியில் 5 லட்சம் வரை கடன் உதவி வழங்கியது. அதனை தொடர்ந்து செயலாக்க கட்டணமின்றி கடன் வாங்கலாம் என்ற புதிய சிறப்பான சலுகையை அறிமுகப்படுத்தியது. இப்படி பல வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.

அதனை தொடர்ந்து தற்போது டெபிட் கார்டு மூலம் கடன் பெற்று இஎம்ஐ செலுத்தும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இஎம்ஐ வசதியானது 6, 9, 12 அல்லது 18 மாதங்கள் வரை உள்ளது. இதன் மூலம் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ டெபிட் கார்டு மூலம் 8000 ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரையில் கடன் பெறலாம். POS இயந்திரம் அல்லது ஆன்லைன் பண பரிவார்த்தனைகளுக்கு இந்த எஸ்பிஐ டெபிட் கார்டை பயன்படுத்தி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டெபிட் கார்டு மூலம் நீங்கள் பெறும் கடன் தொகைக்கு 2 வருட MCLR விகிதத்துடன் 7.50 சதவீதம் வட்டி வசூலிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த சிறப்பான திட்டத்தை பெற வாடிக்கையாளர்கள் DCEMI என்று டைப் செய்து 567676 எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். டெபிட் கார்டு மூலம் கடன் வாங்கி ஈ.எம்.ஐ கட்ட எவ்வித கட்டணமும் இல்லை முற்றிலும் இலவசம். எம்.ஐ தொகையை வாடிக்கையாளரின் சேமிப்பு கணக்கின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படும் என வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. டெபிட் கார்டு மூலம் ஈஎம்ஐயை POS இயந்திரம் மூலம் செலுத்தலாம் அல்லது ஆன்லைன் மூலம் செலுத்தலாம். இது குறித்த கூடுதல் விவரங்களை எஸ்பிஐ இணையதளத்தில் தெரிந்து கொள்ளவும்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: