தமிழ்நாடு

அரசு பெண் ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மகப்பேறு விடுப்பு 12 மாதமாக நீட்டிப்பு!!

தமிழக அரசுத்துறைகளில் பணியாற்றி வரும் பெண் ஊழியர்களுக்கு கொடுக்கப்படும் மகப்பேறு விடுப்பை 270 நாட்களிலிருந்து 12 மாதமாக அதிகரித்து தற்போது தமிழக அரசின் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசுத்துறை அலுவலகங்களில் பணி புரிந்து வரும் ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகள் கொடுக்கப்பட்டு வருவது வழக்கம். இது தவிர பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு காலத்திலும் குறிப்பிட்ட விடுப்பு காலத்தை கொடுத்து முழு ஊதியத்தையும் அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில் பெண் ஊழியர்களின் மகப்பேறு காலத்தில் கொடுக்கப்பட்டிருந்த 270 நாட்கள் விடுப்பை தற்போது 12 மாதமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அரசு வெளியிட்ட அரசாணையில், அரசு அலுவலகங்களில் பணிபுரியும் திருமணமான பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 180 நாட்களிலிருந்து 270 நாட்களாக உயர்த்தி உத்தரவு பிறப்பிக்கப்பட்டன. அதன் கீழ் பெண் ஊழியர்களுக்கு முழு ஊதியத்துடன் விடுப்புகள் அளிக்கப்படுகிறது. இந்த அரசாணையின் அடிப்படை விதிகள் 101 (அ) மீண்டுமாக திருத்தப்பட்டுள்ளது. இதனுடன் ஆகஸ்ட் 13 அன்று சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட, 2021-2022 ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட பட்ஜெட்டில் மாண்புமிகு நிதி அமைச்சர் மகப்பேறு விடுப்பு காலத்தை 12 மாதங்களாக உயர்த்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதன் படி 01.07.2021 முதல், இரண்டுக்கும் குறைவான குழந்தைகளைக் கொண்ட அரசு ஊழியர்களுக்கு 12 மாதங்கள் வரை மகப்பேறு விடுப்பு எடுத்துக்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை பரிசீலித்த அரசு, மகப்பேறு விடுப்பை 9 மாதங்கள் (270 நாட்கள்) முதல் 12 மாதங்களாக (365 நாட்கள்) உயர்த்தி அறிவித்தது. அந்த வகையில் 01.07.2021 முதல் பெண் அரசு ஊழியர்களின் விடுப்பு காலம் பிரசவத்திற்கு முன் அல்லது பின்னர் எடுத்துக்கொள்ளலாம். மேலும் 2021, ஜூலை 15 ஆம் தேதிக்கு முன்னர் மகப்பேறு விடுப்பில் இருந்த அல்லது அதற்குப் பிறகு விடுப்பில் இருக்கும் பெண் ஊழியர்கள் 365 நாட்கள் விடுப்புக்கு தகுதியுடையவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  ஆகஸ்ட் 22ம் தேதி கடைகளை திறக்க தடை – மாவட்ட நிர்வாகம்!!
Back to top button
error: