இந்தியாவில் தனிநபரின் முகவரி சான்றாகவும் அடையாள ஆவணமாகவும் ரேஷன் கார்டு உள்ளது. அத்துடன் சாதாரண மக்களுக்கு அன்றாட தேவையான உணவு பொருட்கள் கிடைக்கும் வகையில் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ரேஷன் கார்டு மூலமாக ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அத்துடன் அரசின் அனைத்து நலத்திட்டங்களும் ரேஷன் கார்டு மூலமாக செயல்படுத்தப்படுகிறது. அனைத்து குடும்பத்தினரும் ரேஷன் கார்டு வைத்திருப்பது அவசியமானதாகும். அத்துடன் தற்போது அனைத்து ரேஷன் கடைகளிலும் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமலில் உள்ளது.
அத்துடன் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இத்திட்டத்தின்படி புலம்பெயர் தொழிலாளர் தங்கள் சொந்த ஊரை விட்டு வெளியூர்களுக்கோ அல்லது வெளி மாநிலத்திற்கோ சென்றாலும் அங்குள்ள ரேஷன் கடைகளில் சுலபமாக உணவு பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். இந்த நிலையில் ரேஷன் கார்டில் புதிய விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது இந்த புதிய விதிமுறையின்படி ரேஷன் கார்டுதாரர்கள் தொடர்ந்து 6 மாதங்கள் ரேஷன் பொருட்களை வாங்காமல் இருந்தால் அவர்களின் கார்டு ரத்து செய்யப்படும்.
அதன்படி பயனுள்ள நபர்களுக்கு உணவு பொருட்கள் சென்றடைவதை உறுதி செய்ய முடிகிறது. மேலும் அவ்வப்போது தகுதியான நபர்களுக்கு பதிலாக வேறொரு நபர் பெற்று கொண்டு சந்தைகளில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை தடுப்பதற்கு இந்த புதிய விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தேவைப்படுபவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் வகையில் இந்த முறை அமலுக்கு வருகிறது. இந்த புதிய விதிமுறை முதற்கட்டமாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் அமலுக்கு வருகிறது. இந்த விதிமுறை இந்தியாவின் மற்ற மாநிலங்களில் அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh