இந்தியா

சபரிமலை ஐயப்பன் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கூடுதலாக 5000 பேருக்கு அனுமதி!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்து வரும் காரணத்தால் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரள மாநிலம் சபரிமலையில் கூடுதலாக 5000 பக்தர்கள் அனுமதிக்க திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு முடிவு செய்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதன் காரணமாக கொரோனா பரவல் கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் கேரளத்தில் கொரோனா பரவல் குறைவாக உள்ளதால் சபரிமலை கோவில் திறக்கப்பட்டு பக்தர்கள் வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பல மாநிலங்களில் இருந்து கோவிலுக்கு பக்தர்கள் அதிகமாக வருவதால் முன்பதிவு மூலமாக முதலில் 5000 பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு வருகிற ஜூலை 21 ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஐந்து மாத இடைவெளிக்குப் பின் கோயில் நடை திறக்கப்பட்ட நிலையில், நாளொன்றுக்கு 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் முன்பதிவு தொடங்கி சில மணி நேரங்களில் ஐந்து நாட்களுக்கு 25 ஆயிரம் பக்தர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்து விடுகின்றனர்.

இதனால் முன்பதிவு கிடைக்காமல் பல பக்தர்கள் வருத்தத்தில் உள்ளனர். எனவே தற்போது கூடுதலாக 5 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்க திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு முடிவு செய்துள்ளது. இதன்படி மொத்தமாக தினசரி 10000 பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் வரும் போது 48 மணி நேரத்திற்கு முன்பாக எடுத்த கொரோனா நெகடிவ் சான்றிதழ் காண்பித்து தரிசனம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: