இந்தியா

ஜியோ சிம் பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – புதிய ரீசார்ஜ் சலுகை திட்டம் அறிமுகம்!!!

ஜியோ நிறுவனமானது தொலைத்தொடர்பு சேவையில் மிக முக்கிய பங்கினை வகித்து வருகிறது. இந்நிலையில் தனது வாடிக்கையாளர்களை குஷி அடைய செய்யும் வகையில் 1095 ஜிபி டேட்டாவுடன் புதிய சலுகையை அறிமுகம் செய்துள்ளது.

ஜியோ:

இந்தியாவில் உள்ள தொலைதொடர்பு நிறுவனங்களில் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வரும் நிறுவனம் தான் ஜியோ. இந்நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த சலுகைகளில் அதிக அளவில் டேட்டா சேவைகளை வழங்கி வருகிறது. தற்போதைய காலத்தில் மக்கள் அனைவருக்கும் இன்டர்நெட் இன்றியமையா பயனாக இருந்து வருவதால் ஜியோ நிறுவனத்தின் சலுகைகள் அனைத்தும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

தற்போது ஜியோ நிறுவனம் மேலும் ஓர் புதிய சலுகையை அறிமுகம் செய்துள்ளது. இதனை தனது மை ஜியோ செயலி மூலம் அறிமுகப்படுத்தியது. இந்த புதிய சலுகை ஜியோ நிறுவனத்தின் விலை உயர்ந்த ப்ரீபெய்டு சலுகை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையில் பயனர்களுக்கு 1095 ஜிபி டேட்டா வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி பயனர்கள் ரூ.3499 செலுத்தினால் இத்தகைய சலுகையை பெற முடியும்.

இந்த சலுகையில் பயனர்களுக்கு தினமும் 3 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் கூடுதல் சலுகையாக ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ நியூஸ், ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ கிளவுட் போன்ற செயலிகளுக்கு இலவச சந்தா வழங்கப்படுகிறது. ஆனால் அமேசான் பிரைம், நெட் பிலிக்ஸ் போன்றவைக்கு சந்தா வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சலுகையில் 365 நாட்களுக்கு தினமும் 3 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகிறது. தினசரி 3 ஜிபி டேட்டா என்றால் 365 நாட்களுக்கு வீதம் மொத்தம் 1095 ஜிபி டேட்டா வழங்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: