தமிழ்நாடு

ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குவது குறித்த முக்கிய அறிவிப்பு!!

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் குடும்ப உறுப்பினர்கள் கைரேகை வைத்தால் மட்டுமே பொருட்கள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் வயதான, உடல்நிலை சரியில்லாத அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டுள்ளார்.

தமிழக அரசு சார்பில் மக்களுக்கான அனைத்து நலத்திட்டங்களும் ரேஷன் கடைகள் மூலமாகவே வழங்கப்பட்டு வருகிறது. ஏழை, எளிய குடும்பங்கள் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி, பருப்பு, எண்ணெய் ஆகியவற்றை நம்பியே அன்றாட வாழ்க்கையை நடத்துகின்றனர். அதுமட்டுமில்லாமல் ரேஷன் அட்டை வைத்திருக்கும் குடும்பங்களுக்கு சர்க்கரை, கோதுமை, ரவை, கொண்டைக்கடலை போன்றவை வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டு டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டுள்ளது. மக்கள் ரேஷன் கடைகளில் உள்ள பொருட்களின் விவரங்களை வீட்டில் இருந்தே செயலி மூலமாக தெரிந்து கொள்ளலாம். மேலும் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் தான் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது. குடும்ப உறுப்பினர் யாராவது கடைக்கு நேரடியாக சென்று கைரேகை வைத்தால் மட்டுமே பொருட்கள் வழங்கப்படும்.

இதனால் வயதானவர்களும், உடல்நிலை சரியில்லாமல் இருப்பவர்களும் ரேஷன் கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்க முடியாத நிலை உள்ளது. இதனால் இது குறித்து முக்கிய அறிவிப்பை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டு உள்ளார். அதில் வயதான, உடல்நிலை சரியில்லாதவர்களுக்கு பதில் யார் வேண்டுமானாலும் ரேஷன் பொருள் பெறலாம் எனவும், ரேஷன் கடைக்கு செல்ல முடியாதவர்கள் கடிதம் அளித்தால் அவருக்கு பதில் வேறொருவர் கைரேகை வைத்து பொருட்கள் பெறலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:  காவல் நிலையங்களுக்கு முக்கிய உத்தரவு பிறப்பிப்பு – டிஜிபி அறிவிப்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: