தமிழ்நாடுமாவட்டம்

அதிதீவிரமாக பரவும் கொரோனா.. பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து இன்று முக்கிய ஆலோசனை..!

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வை திட்டமிட்டமிட்டபடி நடத்துவதா அல்லது ஒத்தி வைப்பதா என்பது குறித்து, சென்னையில் இன்று முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளது.

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் தொடங்கும் ப்ளஸ் 2 பொதுத்தேர்வு, கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு மே மாதம் 3ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கு மறுநாள் நடக்க இருந்த பிளஸ்-2 மொழிப்பாடத் தேர்வை மட்டும் மே 31-ம் தேதிக்கு ஒத்தி வைத்து அரசுத் தேர்வுத்துறை உத்தரவு பிறப்பித்தது.

இதையடுத்து, மே 5-ம் தேதி முதல் பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கவுள்ளது. ஆனால், மே 4-ம் தேதி முதல் தொடங்க இருந்த சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக, பிரதமர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பின், மத்திய கல்வித்துறை நேற்று அறிவித்தது.

தமிழகத்திலும் கொரோனா தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பிளஸ்-2 தேர்வு திட்டமிட்டபடி நடத்தப்படுமா? அல்லது ஒத்திவைக்கப்படுமா? என்பது தொடர்பாக இன்று ஆலோசனை நடைபெறவுள்ளது.

201805290847226582 Tamil Nadu Assembly begins today SECVPF

தலைமை செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் திரு.ராஜீவ் ரஞ்சன், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் திரு.தீரஜ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

இதையும் படிங்க:  நீண்ட கால ஆரோக்கியத்தை வழங்கும் சக்திவாய்ந்த தாவரங்கள்! இப்படி எடுத்து கொண்டால் நன்மையே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: