தமிழ்நாடு

ஜூலை 5க்கு பிறகு கூடுதல் தளர்வுகள் அமல்? முதல்வர் முக்கிய ஆலோசனை!!

தமிழகத்தில் வரும் ஜூலை 5 காலை 6 மணியுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவுக்கு வரும் நிலையில், கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் முக்கிய ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

தமிழகத்தில் கடந்த மே மாதம் 10ம் தேதி முதல்முறையாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இருந்தும் கொரோனா ஆதிக்கம் செலுத்தி வந்ததால் கடும் கட்டுப்பாடுகள் அடங்கிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக கடந்த 3 வாரத்திற்கு மேலாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக குறையத் தொடங்கியது. இதனால் தமிழகத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழக மாவட்டங்கள் 3 வகையாக பிரிக்கப்பட்டு தளர்வுகள் அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் வரும் ஜூலை 5 காலை 6 மணியுடன் முடிவுக்கு வரவுள்ளது. இதையடுத்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தலைமை செயலகத்தில் இது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த கூட்டத்தில் மருத்துவ குழுவினர், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த கூட்டத்தில் கூடுதல் தளர்வுகள் குறித்தும் கூடுதல் தளர்வுகள் அறிவித்த மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரிப்பு குறித்தும் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். மேலும் புதிய தளர்வாக வகை 1ல் உள்ள 11 மாவட்டங்களில் கடைகள் திறப்பு நேரம் அதிகரிப்பு, பேருந்து சேவைக்கு அனுமதி, தேநீர் கடைகள், உணவகங்களில் 50% வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்ண அனுமதி போன்ற தளர்வுகள் வழங்கப்படலாம். இதற்கான முக்கிய அறிவிப்பு முதல்வரின் ஆலோசனை கூட்டத்திற்கு பின் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: