தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நடைமுறையில் உள்ள புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வர கல்லூரி பேராசிரியர்கள் கோரிக்கை முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும் என்று திமுக கட்சியானது கடந்த மாதம் நடைபெற்ற சட்ட மன்றத் தேர்தலின் போது வாக்குறுதி அளித்தார். இந்த நிலையில் திமுகவினர் ஆட்சி பொறுப்பேற்றவுடன் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தும் படி பல்வேறு கோரிக்கைகள் எழுந்தது. தற்போது நடைமுறையில் உள்ள புதிய ஓய்வூதிய திட்டம் கடந்த 2004ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. இந்த ஓய்வூதிய திட்டம் ஊழியர்களுக்கு பண பலன்களை அளிக்க வில்லை என்று கருத்து தெரிவித்தனர்.
இந்த திட்டத்தில் மாதந்தோறும் வழங்கப்படும் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டு பணி காலத்தில் பிடித்தம் செய்த தொகை மட்டுமே வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் வந்தது. மாவட்டம் தோறும் ஊழியர்கள் மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தையே கொண்டு வர வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினர். அதிமுக அரசு ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் ஆன நிலையில் இன்னும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவில்லை என்று குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் நாகர்கோவில் இந்து கல்லூரியில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி கல்லூரி ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். இந்த பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது. இது குறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டு அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh