இந்தியா

மணிப்பூர் கவர்னராக இல.கணேசன் இன்று பதவியேற்பு!!!

மணிப்பூர் மாநிலத்தின் புதிய கவர்னராக தமிழகத்தை சார்ந்த இல. கணேசன் அவர்கள் இன்று பதவி ஏற்றுக் கொண்டார்.

தேசிய கட்சியான பாரதிய ஜனதாவில் கடந்த சில நாட்களாக புதிய பதவிகள் பற்றிய அறிவிப்பும், இளம் தலைமுறைக்கு பதவிகள் பற்றிய அறிவிப்பும் வெளியாகி அந்த கட்சியில் உள்ளோரை மகிழ்வடைய வைத்திருக்கிறது. இந்த நிலையில், பாஜக மேலிடத்தில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதனால், பல புதிய இளம் நபர்கள் கட்சியின் மேலிட பொறுப்புக்கு வந்ததை அடுத்து கட்சி வலுவடைந்து இருப்பதாக மேலிடம் பெருமிதம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் பாஜகவை சேர்ந்த இல. கணேசன் மணிப்பூர் மாநில கவர்னராக நியமிக்கப்பட உள்ளார் என்ற அறிவிப்பு குடியரசு தலைவர் அறிக்கையில் வெளியானது. மாநிலங்களவை முன்னாள் எம்.பி.யான இல.கணேசன், இதற்கு முன் பாஜகவில் தேசிய குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார். ஆர்.எஸ்.எஸ் பின்னணி கொண்டவரான இவர் தமிழக பாஜக தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தகுந்தது. இவர், மாநிலத்தின் ஆளுநராக பதவி ஏற்றுக் கொள்வதால், பாஜகவின் தனது இதர பதவிகளை ராஜினாமா செய்து அதன் கடிதத்தை அண்மையில் தமிழக பாஜக தலைவர் அண்ணமலையிடம் வழங்கினார்.

இதனை அடுத்து, காஞ்சி விஜயேந்திர சுவாமிகளை சந்தித்து வாழ்த்து பெற்றார். அதன் பிறகு, மணிப்பூர் மாநிலத்தின் புதிய ஆளுநராக இன்று பதவி ஏற்றுக்கொண்டார். மணிப்பூரின் ஆளுநராக இருந்த நஜ்மா ஹெப்துல்லா வின் பதவிக்காலம் கடந்த 20 ஆம் தேதியோடு நிறைவடைந்ததால் புதிய ஆளுநராக பதவி ஏற்றுள்ள இல.கணேசன் அவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:  ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் செப்.4 வரை இரவு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: