இந்தியாதமிழ்நாடு

IFSC நம்பர் மாறப்போகுது.. வாடிக்கையாளர்கள் கவனத்துக்கு!

வங்கித் துறையில் நிலவும் நெருக்கடிகளைச் சமாளிக்கும் வகையில் பேங்க் ஆஃப் பரோடா, தேனா பேங்க், விஜயா பேங்க் ஆகிய மூன்று வங்கிகளையும் இணைக்க 2019 ஏப்ரல் மாதத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, விஜயா பேங்க், தேனா பேங்க் ஆகியவற்றின் 3,898 வங்கிக் கிளைகளையும் பேங்க் ஆஃப் பரோடாவங்கி தன்னுடன் இணைத்துள்ளது. மூன்று வங்கிகளும் இணைக்கப்பட்டுள்ள நிலையில் இவற்றின் வாடிக்கையாளர்களிடம் உள்ள மிகப் பெரிய கேள்வியே அவர்களின் வங்கிக் கணக்கு எண் மாறுமா என்பதுதான்.

வங்கிக் கிளையின் டேட்டா மாற்றத்துக்குப் பிறகு வங்கிக் கணக்கு எண் மாற்றப்படும் என்று வங்கி தரப்பில் கூறப்பட்டுள்ளது. வங்கிக் கிளை மாறுவதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட வாடிக்கையாளருக்கு வங்கி தரப்பிலிருந்து தகவல் கொடுக்கப்படும். எஸ்எம்எஸ் மூலமாகவும் அவர்களுக்குத் தகவல் வரும். வங்கிக் கணக்கு எண் மட்டுமல்லாமல் வாடிக்கையாளர் அடையாள எண்ணும் மாற்றப்படும். இவ்வங்கி வாடிக்கையாளர்களுக்கான IFSC நம்பர் மார்ச் 1 முதல் மாறப்போகிறது.

IFSC குறியீட்டில் மாற்றம் ஏற்பட்டாலும் அதன் வாடிக்கையாளர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. தற்போதைய நிலையில், இந்த வங்கிக் கிளைகளின் IFSC குறியீடுகளை பிப்ரவரி 28 வரை பயன்படுத்தலாம்.

இது தொடர்பாக அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வங்கி தரப்பிலிருந்து தகவல் அளிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் பாஸ்புக், ஏடிஎம் உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் மாற்றப்படுகின்றன.

இதுவரையில் மாற்றப்பட்ட விவரங்கள் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், முழு விவரம் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருக்கும் எனவும் அவ்வங்கி கூறியுள்ளது.

தேனா பேங்க் மற்றும் விஜயா பேங்க் வாடிக்கையாளர்கள் ஏற்கெனவே உள்ள தங்களது ஏடிஎம் கார்டுகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. அந்த ஏடிஎம் கார்டுகள் எக்பைரி ஆகும்வரை பயன்படுத்திக்கொள்ளலாம். எக்ஸ்பைரி ஆகும் வரை ஏடிஎம் PIN நம்பரும் அதே நம்பர்தான்.

Back to top button
error: Content is protected !!