பத்து நாட்களில் தொப்பையை குறைக்க வேண்டுமா? அப்போ இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிடுங்க!
உலக அளவில் அமெரிக்கர்கள்தான் அன்னாசிப் பழங்களை அதிகம் சாப்பிடுகின்றனர். அதனாலேயே அந்த நாட்டில் சிறுநீரக கோளாறு உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு.
அன்னாசி பெரும்பாலும் வெப்பமான பகுதிகளில் பயிரிடப்படுகிறது. புரதத்தை செரிக்கக் கூடிய புரோமலைன் என்ற என்சைம் இதில் அதிகம் உள்ளது. இது ரத்தம் உறையாமல் பாதுகாக்கிறது. தையாமின் மற்றும் வைட்டமின் சி சத்தும் அன்னாசியில் அதிகம் உள்ளது.
அன்னாசியில் உள்ள குளோரின் என்ற உப்பு சிறுநீரகங்கள் சிறப்பாக இயங்க தூண்டிக் கொண்டே இருக்கிறது. இதனால் உடலிலுள்ள விஷப் பொருட்களும், கழிவுப் பொருட்களும், உடனுக்குடன் சிறுநீர் மூலம் வெளியேறி உடல் ஆரோக்கியமாக புதுப்பிக்கப்படுகிறது.
அன்னாசி பழத்தை அளவாக சாப்பிட்டால் பயன்கொடுக்க கூடியதாக இருக்கும். இதில் பல உடல்நல பயன்கள் இருப்பது போல சில உடல் நலத்தை பாதிக்கும் காரணிகளும் அடங்கியுள்ளன.
அன்னாச்சி பழம் மிகுந்த சக்தி வாய்ந்த ஒரு பழமாகும். இது புண்கள் மற்றும் வீக்கங்களை சரி செய்யக் கூடிய தன்மை உடையது. ஈரானிய ரெட் கிரெசெண்ட் மெடிக்கல் ஜர்னல் ஆனது 2016 ஆம் ஆண்டில் அன்னாச்சிப்பழத்திற்கு இருக்கும் புண்களை ஆற்றும் தன்மையை கண்டறிந்தது. இது பிரசவமான பெண்களுக்கு இருக்கும் புண்களை விரைவில் ஆற்றும் தன்மை கொண்டது என்று தனது ஆய்வின் மூலம் கண்டறிந்தது.
அன்னாசியில் மாங்கனீஸ் உள்ளிட்ட சத்துக்கள் அதிகமாக உள்ளது. இதேபோல் வெப்பச்சலன பகுதியிலேயே அதிகமாக விளையும் அன்னாசியில் புரதத்தை செரிக்கக்கூடிய புரோமலைன் என்னும் என்சைம் அதிக அளவில் இருக்கிறது.இது நமது உடலில் இரத்தம் உறைந்து விடாமலும் பாதுகாக்கிறது. மேலும் அன்னாசியில் வைட்டமின் சி சத்தும் அதிக அளவு உள்ளது.
தொப்பை குறைய
ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு ட்மளர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும். இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறுநாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொப்பை கரைய ஆரம்பிக்கும்.
லேசான அலர்ஜிகள்
அன்னாசி பழம் சாப்பிடுவதால் சில பெண்களுக்கும் ஆண்களுக்கும் லேசான அலர்ஜிகள் ஏற்படலாம். இதனை போக்க அன்னாசி பழ துண்டுகளை சுத்தமான உப்பு தண்ணீரில் கழுவ வேண்டும். சொறியை ஏற்படுத்தும் பழ என்சைம்களை இது நீக்கிவிடும்.
முடக்குவாதம்
முடக்குவாதம் மற்றும் கீல்வாதம் உள்ளவர்கள் அன்னாசி பழத்தை அதிகமாக சாப்பிட வேண்டாம். அன்னாசி பழம் சாப்பிடும்போது அது இரைப்பை குடலுக்குள் செல்லும் போது ஆல்கஹாலாக மாறி விடுகிறது. இதனால் அதை உட்கொள்பவர்களுக்கு அது கீல்வாதத்தை தூண்டி விடும்.
நோய் எதிர்ப்பு சக்தி
அன்னாசியில் வைட்டமின் சி சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. மேலும் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது.இதனை தினமும் உண்டு வந்தால் உங்களின் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவடையும்.
காயங்களை விரைவில் ஆற
அன்னாசி பழத்தில் உள்ள அதிக அளவு வைட்டமின் சி உங்கள் காயங்களை விரைவில் ஆற்ற உதவுகின்றது. எனவே உங்கள் காயங்களை விரைவில் ஆற்ற அன்னாசி பலத்தினை உட்கொண்டு வரவும்.
கண்களுக்கு
அன்னாசி பழத்தில் அதிக அளவில் வைட்டமின் எ சத்துக்கள் நிறைந்துள்ளது. வைட்டமின் எ உங்களுக்கு பார்வை குறைபாடு ஏற்படாமல் தடுக்க உதவுகின்றது.மேலும் பார்வை கோளாறு, மாலை கண் நோய் போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும். எனவே அன்னாசி பழத்தினை தினமும் உட்கொண்டு வாருங்கள்.