ஆரோக்கியம்தமிழ்நாடு

7 நாட்களில் எடையை குறைக்கனுமா? அப்போ இந்த ஜூஸ் தொடர்ந்து குடிச்சாலே போதும்!

பொதுவாக உணவில் அதிகளவில் பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்துக் கொள்வதன் மூலம், உடல் எடை கணிசமாக குறைவதோடு, உடலை ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள முடியும்.

ஏனெனில் நார்ச்சத்து அதிகம் கொண்ட ஸ்மூதிகள், பழங்கள் மற்றும் அதன் சாறுகள், காய்கறிகள் மற்றும் அதன் சாறுகளில், நம் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

அந்தவகையில் 7 நாட்களில் எடையை கணிசமாக குறைக்கு டயட் திட்டம் ஒன்றினை பற்றி பார்ப்போம்.

நாள் 1 : கீரைச்சாறு

இந்த ஜூஸில் உள்ள செர்லி மற்றும் பார்ஸ்லி கலவை, உயிரை பறிக்கும் வகையிலான புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தவல்லது. இது உடல் எடை குறைக்கவும் உதவுகின்றது.

​நாள் 2 : தக்காளி ஜூஸ்

தக்காளி மற்றும் காய்கறிகளின் ஜூஸை, தினமும் குடித்து வந்தால், இது தக்காளி மற்றும் காய்கறி வகைகளை சாப்பிட்ட உணர்வு தோன்றுகின்றன. தக்காளியில் மிக அதிக அளவில் ஆன்டி-ஆக்சிடண்ட்டுகள் நிறைந்திருக்கின்றன.

​நாள் 3 : ஸ்டிராபெர்ரி – வெள்ளரி ஜூஸ்

ஸ்டிராபெர்ரி பழங்களில் அதிகளவில் பாலிபீனால், ஆன்டி ஆக்சிடண்ட்கள் உள்ளன.

இவைகள், புற்றுநோய் மற்றும் இதய நோய்களை கட்டுப்படுத்த உதவுகின்றன.

​நாள் 4 : புளுபெர்ரி – முட்டைக்கோஸ் ஜூஸ்

சிவப்பு முட்டைகோஸ் மற்றும் புளு பெர்ரி ஜூஸில், ஆந்தோசயனின்கள், ஆன்டி ஆக்சிடண்ட்கள் அதிகளவில் உள்ளன. இவை நினைவுத்திறன் மேம்பட உதவுகின்றன.

​நாள் 5 : கீரை – ஆப்பிள் ஜூஸ்

ஆப்பிள் ஜூஸில், வைட்டமின் கே அதிகளவில் உள்ளது. இது எலும்புகள் வலுவாக இருக்க உதவுகிறது.

கீரை மற்றும் ஆப்பிள் இரண்டுமே குறைந்த அளவிலான கலோரிகளையும் அதிக ஊட்டச்சத்துக்களையும் கொண்டிருக்கின்றன.

அதனால் வயிற்றுக்கு இதமாக இருப்பதோடு வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கச் செய்யும்.

​நாள் 6 : இஞ்சி – பீட்ரூட் ஜூஸ்

உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள், பயிற்சி மேற்கொள்வதற்கு முன்னதாக, பீட்ரூட் ஜூஸை குடித்தால், அவர்களது உடலில் ரத்த ஓட்டம் மேலும் அதிகரிப்பதோடு மட்டுமல்லாது, தசைகள் உள்ளிட்டவைகளுக்கு ஆக்சிஜன் அதிகமாக சென்று, ஸ்டாமினை வலுவாக்க உதவுகிறது.

​நாள் 7 : கேரட் – ஆரஞ்ச் ஜூஸ்

வைட்டமின் சி அதிகம் உள்ள பழங்களின் ஜூஸை அதிகம் குடித்து வருவதால், அது நமது ரத்தத்தில் கொழுப்பின் அளவை கட்டுப்படுத்துவதோடு, ரத்த குழாய்களில் டிரைகிளிசரைடுகள் படிதலை குறைக்கிறது.

​உடல் எடையில் மாற்றம் நிகழுமா?

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், காய்கறிகளை தேர்ந்து எடுக்கலாம். ஏனெனில், அவற்றில் குறைந்த அளவில் கலோரிகள் உள்ளன.
அதுமட்டுமல்லாது, நார்ச்சத்து, ஆன்டி ஆக்சிடண்ட்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் அதிகளவில் உள்ளன.

பழங்களின் ஜூஸை குடிப்பதை காட்டிலும், காய்கறிகளின் ஜூஸை நாம் குடித்துவந்தால், நம் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் கிடைப்பதோடு, உடல் எடையையும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க உதவுகிறது.

முக்கிய குறிப்பு

நாம் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், ஆரோக்கியமான புரோட்டீன்கள், கொழுப்புகள் என எந்த வகை உணவுகளை உட்கொண்டாலும், அதில் சர்க்கரை குறைந்த அளவில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

Back to top button
error: Content is protected !!