தமிழ்நாடுமாவட்டம்

வங்கி மேலாளர் ஆக வேண்டுமா? இதோ அரிய வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிரப்பப்பட உள்ள பாதுகாப்பு மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் முக்கியமான வங்கியாகக் கருதப்படும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள பாதுகாப்பு மேலாளர் பணியிடம் விரைவில் நிரப்பப்பட உள்ளது. இந்தப் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம் – பஞ்சாப் நேஷனல் வங்கி (Punjab National Bank)

பணி – பாதுகாப்பு அதிகாரி (Manager Security)

காலியிடங்கள் – 100

கல்வித்தகுதி:

ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம்(Any graduate) முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

ஊதியம் விவரம்:

மாதம் ரூ.48170-1740/1-49910-1990/10-69810 என்ற அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்.

வயது வரம்பு:

01.01.2021 தேதியின்படி, 21 – 35 க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். Essay /Letter drafting முறைகள் நேர்முகத் தேர்வு முறையின் ஒரு பகுதியாக இருக்கும்.

விண்ணப்பக்கட்டணம்:

எஸ்சி(SC), எஸ்டி(ST), பெண் (Female)விண்ணப்பத்தாரர்கள் ரூ.50 கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

https://www.pnbindia.in/Recruitments.aspx என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து பதிவு அல்லது விரைவு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

அஞ்சல் முகவரி:

Chief Manager (Recruitment Section)

HRM Division

Punjab National Bank

Corporate Office

plot no 4, Sector 10

Dwarka

New Delhi -110075

கடைசி தேதி – 13.02.2021

கூடுதல் விவரங்களுக்கு

https://www.pnbindia.in/Recruitments.aspx என்ற லிங்கில் (Link)சென்று தெரிந்துகொள்ளவும்.

Back to top button
error: Content is protected !!