ஆரோக்கியம்தமிழ்நாடுமாவட்டம்

எப்போதும் இளமையாகவே இருக்க வேண்டுமா? அப்போ இந்த பேஸ்பேக் மட்டும் ட்ரை பண்ணி பாருங்க..!

அனைவர்க்கும் தங்களது முகம் எப்போதுமே இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அந்த வகையில் அதற்கு வீட்டில் இருக்கும் சில பொருட்களை பயன்படுத்தி முக அழகினை இளமையாக வைத்து கொள்ளலாம். அது குறித்து இந்த பதிவில் காணலாம்..!!

முக அழகினை பொறுத்தவரை தொடர்ந்து அதனை பராமரித்து வந்தால் தான் அழகு அப்படியே நிலைத்து இருக்கும். வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே முக அழகினை பராமரிக்கலாம். அதே போல் முகத்திற்கு காபி தூள் பயன்பாட்டினால் மிகவும் நல்லது என்றே கூறலாம்.

cleansers .jpg min

காரணம், முகத்தில் உள்ள அழுக்குகளை போக்கும் வலிமை காபி பொடிக்கு உள்ளது. அதே போல் இயற்கையாகவே அதனை பயன்படுத்தும் போது முகம் மிகவும் மிருதுவாக மாறி விடும். அனைத்து வித சருமத்திற்கும் இது நல்ல பலன்களை மட்டுமே வழங்கும். காபி தூள் பயன்படுத்தி செய்யப்படும் ஒரு பேஸ்பேக் குறித்து இந்த பதிவில் காணலாம்.

தேவையான பொருட்கள்

  • காபி தூள் – 3 டீஸ்பூன்
  • கஸ்தூரி மஞ்சள் தூள் – 2 டீஸ்பூன்
  • தயிர் – 3 டீஸ்பூன்

மேற்குறிய அனைத்து பொருட்களையும் நன்றாக கிண்டி விட்டு கொள்ள வேண்டும். பின், முகத்தினை நன்றாக கழுவி விட்டு இந்த கலவையினை தடவ வேண்டும். 20 நிமிடங்களுக்கு பிறகு, இதனை கழுவி விட வேண்டும்.

coffee turmeric yogurt

வாரத்திற்கு இதனை இரு முறை பயன்படுத்தி வந்தால், முகம் பொலிவாக மாறி விடும். அதே போல் எப்போதும் இளமையாகவே இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: