ஆரோக்கியம்தமிழ்நாடு

வெயில் காலத்தில் உடல் சூட்டால் அவதிப்படுறீங்களா? இந்த ஜூஸை குடித்தாலே போதும்..!

வெயில் காலத்தில் உடல் சூட்டால் அவதிப்படுபவர்கள் சப்ஜா விதையை உணவில் சேர்த்து கொள்வது நல்லது.

சப்ஜா விதை சேர்த்து ஜூஸ் செய்வது குடிப்பது சிறந்தது. அந்தவகையில் இன்று சப்ஜா விதை வைத்து செய்யக்கூடிய சூப்பரான ஜூஸ் ஒன்றை எப்படி செய்யலாம் என பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

தர்பூசணி – 150 கிராம்,
சப்ஜா விதை – 1 டீஸ்பூன்,
எலுமிச்சைச்சாறு – 1/2 டீஸ்பூன்,
தேன் – தேவைக்கு,
புதினா இலை – சிறிது.

செய்முறை

தர்பூசணியை தோல் விதை நீக்கி அரைத்துக் கொள்ளவும்.

சப்ஜா விதையை தண்ணீர் ஊற்றி 8 மணி நேரம் ஊற வைக்கவும்.

தர்பூசணி ஜூஸ், ஊறிய சப்ஜா விதை, தேன், எலுமிச்சைச்சாறு, புதினா இலை கலந்து ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து ஜில்லென்று பரிமாறவும்.

625.0.560.350.160.300.053.800.668.160.90

குளுகுளு தர்பூசணி சப்ஜா ஜூஸ் ரெடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: