தமிழ்நாடுபொழுதுபோக்கு

உங்க வீட்ல கடலைமாவு இருக்கா? அப்படின்னா இந்த தட்டையை ஒரு வாட்டி செஞ்சு பாருங்க..!

கடைகளில் விற்கும் தட்டை போலவே, நம்முடைய வீட்டிலும் சுவையாக தட்டை செய்யலாம். அரிசிமாவு கூட வேண்டாங்க! கொஞ்சம் வித்தியாசமா கடலை மாவை வைத்து, சுலபமான முறையில், மொறு மொறு தட்டை எப்படி செய்வது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த தடையை செய்வதற்கு ரொம்ப நேரம் எடுக்காது. மொத்தமா 30 நிமிடம் இருந்தா போதும். மாவு பிசஞ்சு தட்டி எண்ணெயில் பொறித்து எடுத்திடலாம்.

முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் 1 கப் அளவு கடலை மாவை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதில்,

  • மிளகாய்தூள் – 1 ஸ்பூன்,
  • சீரகம் – 1/2 ஸ்பூன்,
  • எள்ளு – 1 ஸ்பூன்,
  • பெருங்காயத்தூள் – 1/4 ஸ்பூன்,
  • உப்பு தேவையான அளவு,

மிகவும் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை இவை அனைத்தையும் சேர்த்து முதலில் நன்றாக கலந்து விட்டு விட வேண்டும்.

இறுதியாக 2 டேபிள்ஸ்பூன் அளவு சூடான எண்ணெயை இந்த மாவோடு சேர்த்து, கையை சுட்டுக் கொள்ளாமல், கிளறி விட்டு, அதன் பின்பு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரை தெளித்து, மாவை கெட்டி பதத்தில் பிசைந்து கொள்ள வேண்டும். அதாவது சப்பாத்தி கட்டையில் மாவை தேய்த்தால், பிசுபிசுவென்று ஒட்டாமல் இருக்க வேண்டும். அந்த அளவிற்கு சப்பாத்தி மாவு பதத்திற்கு இந்த மாவை பிசைந்து தயார் செய்து கொள்ளுங்கள்.

இந்த மாவு வறண்டுபோகாமல் இருக்க மேலே அரை ஸ்பூன் எண்ணெயை விட்டு, தடவி ஒரு மூடி போட்டு 15 நிமிடங்கள் வரை ஊற வைத்துக் கொள்ளுங்கள். பிசைந்த இந்த மாவை இரண்டு பாகங்களாகவோ அல்லது மூன்று பாகங்களாக பிரித்துக் கொண்டு சப்பாத்தி பலகையின் மீதோ அல்லது உங்களது சமையல் மேடையின் மீதோ கொஞ்சமாக எண்ணெய் விட்டு தடவி, சப்பாத்தி போல வட்ட வடிவில் தேய்க்க வேண்டும். சப்பாத்தி போல் மெல்லிசாக தேய்த்து விடாதீர்கள். கொஞ்சம் தட்டை தடிமனாகவே இருக்கலாம். பூரிக்கு கொஞ்சம் தடிமனாக தேய்ப்போம் அல்லவா? அந்த அளவிற்கு திரட்டி, தேய்த்துக் கொள்ளுங்கள்.

தேய்த்து வைத்திருக்கும், இந்த மாவை ஒரு மூடியை வைத்து, சிறிய சிறிய அளவில் தட்டை வடிவத்தில் வெட்டி எடுத்துக்கொண்டு. சூடான எண்ணெயில் போட்டு பொறித்து எடுத்தால், சூப்பரான தட்டை தயாராகி இருக்கும்.

இந்த தடைகளை நன்றாக ஆறிய பின்பு, குழந்தைகளுக்குக் கொடுத்துப் பாருங்கள். மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் நல்ல வாசத்தோடு, 30 நிமிடத்தில் உங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே இந்த மொறு மொறு தடையை தயார் செய்துவிடலாம். ஒரு வாட்டி, உங்க வீட்லயும் ட்ரை பண்ணித்தான் பாருங்களேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: