இந்தியாதமிழ்நாடு

டிப்ளமோ முடித்தவரா நீங்கள்? வனத்துறை வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..

சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கிடும் வனக் கல்வி இயக்குநரகத்தில் காலியாக உள்ளதாக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அங்கு Assistant Instructor, Sports Officer, Superintendent, Accountant, Stenographer & Upper Division Clerk பணிகளுக்கு காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. அவற்றிற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

காலிப்பணியிடங்கள் :

Assistant Instructor, Sports Officer, Superintendent, Accountant, Stenographer & Upper Division Clerk பணிகளுக்கு என 18 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் B.E/ Diploma அல்லது அதற்கு இணையான பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.25,500/- முதல் அதிகபட்சம் ரூ.1,42,400/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் Test/ Interview அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள் அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Official PDF Notification – http://www.dfe.gov.in/Vacancy-circular-2020-21-english.pdf

Back to top button
error: Content is protected !!