ஆரோக்கியம்தமிழ்நாடு

முடி உதிர்வு அதிகமாக இருக்கா? அப்போ இந்த உணவுகளை அதிகம் எடுத்து கோங்க..

முடி உதிர்வு என்பது இப்போது சர்வசாதரணமாகிவிட்டது. குறிப்பாக இந்த முடி உதிர்வால் பெண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

இதற்காக அவர் பல முய்ற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அதில் அந்த அளவிற்மு முழு திருபதி அடைவதில்லை.

முடி உதிர்வுக்கு முக்கிய காரணம் உணவு பழக்கம், மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு, கர்ப்பம், சூரிய ஒளியில் அதிக நேரம் செலவிடுவது, ரத்தசோகை, ஹைப்போ தைராய்டிசம், வைட்டமின் பி குறைபாடு, ரசாயனம் கலந்த பொருட்களை கூந்தலுக்கு அதிகம் பயன்படுத்துவது போன்றவை பொதுவான காரணங்கள் ஆகும்.

முடி உதிர்தலை கட்டுப்படுத்தும் உணவுகள்

உலர்ந்த அத்திப்பழம்

கூந்தலின் ஆரோக்கத்தியை ஊக்குவிக்கும் ஊட்டச்சத்துக்கள் அத்திப்பழத்தில் உள்ளன. இது இரத்த ஓட்டத்தை தூண்டி முடி வளர்ச்சியை விரைவுபடுத்தும்.

அத்திப்பழத்தில் அதிக அளவு கால்சியமும் உள்ளது. இது தலை முடியை உருவாக்கும் கொலாஜன் உருவாகுவதற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

இரவில் 2-3 உலர்ந்த அத்திப்பழங்களை ஊற வைத்துவிட்டு காலையில் தண்ணீருடன் சேர்த்து சுவைக்கலாம். இரண்டு மாதங்கள் இவ்வாறு சாப்பிட்டு வந்தால் கூந்தல் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் உருவாகும்.

கறிவேப்பிலை

இதில் ஆன்டி ஆக்சிடென்டுகள் அதிகம் உள்ளன. அவை தலையில் ஈரப்பதத்தை தக்கவைப்பதோடு இறந்த மயிர்கால்களை நீக்கவும் உதவுகின்றன.

கருவேப்பிலையில் இருக்கும் பீட்டோ கரோட்டின் மற்றும் புரத சத்துக்கள் முடி உதிர்வதை தடுக்கக்கூடியவை. முடிக்கு வலிமையும் அளிக்கும்.

கருவேப்பிலையை சமையலில் உபயோகிப்பதோடு மட்டுமல்லாமல் சாப்பிடுவதற்கு முன்பாக 10 கறிவேப்பிலை இலைகளை உட்கொள்வது சிறந்த பலனை தரும்.

பூசணி

பொட்டாசியம், துத்தநாகம் போன்ற தாதுக்கள் பூசணியில் நிறைந்துள்ளன. அவை கூந்தல் ஆரோக்கியத்திற்கும், முடி வளர்ச்சிக்கும் உதவும்.

கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கு துத்தநாகம் உதவும். மேலும் இறக்கும் மயிர்க்கால்களை அகற்றவும், மீண்டும் அதில் வலுவான முடி வளர்ச்சிக்கும் உதவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: