விளையாட்டு

‘தினமும் இப்படி ஒரு ஸ்ட்ராபெரி சாப்பிட்டால் ஒன்னு கூட மிஞ்சாது’ – வைரலாகும் தோனி வீடியோ!

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில் தற்போது இந்தியா அணியின் முன்னாள் கேப்டன் தோனி தீவிரமாக விவசாயம் செய்து வருகிறார். மேலும் இவரது தோட்டத்தில் இருந்து வரும் பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும் தகவல் வந்துள்ளது. தற்போது தோனி ஸ்ட்ராபெரி சாப்பிடும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

தோனி:

இவர் இந்தியா அணியின் முன்னாள் கேப்டனாக திகழ்ந்தார். கிரிக்கெட் உலகில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார் தோனி. இந்தியாவிற்காக 2007ல் ஐசிசி டி 20 உலக கோப்பை, 2010 மற்றும் 2016இல் ஏசியன் கப் மற்றும் 2011ல் ஐசிசி உலக கோப்பை மற்றும் 2013ல் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போன்ற கோப்பைகளை இந்தியாவிற்காக விளையாடி ஜெயித்துள்ளார். மேலும் ஐபிஎல் தொடரில் சி.எஸ்.கே அணிக்காக 3 முறை கோப்பையை வென்றுள்ளார். கடந்த ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து இவர் ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார்.

1552062051 3846

இந்த முடிவு இவரது ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது. இனி வரும் காலங்களில் இவர் ஐபிஎல் போட்டிகளில் மட்டும் பங்கேற்பர் என்றும் அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இவரது ஓய்வு இந்தியா அணிக்கு பெரும் இழப்பாக அமையும். விக்கெட் கீப்பராகா சர்வதேச போட்டிகளில் நிறைய சாதனையை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடைசியாக 2019ல் நடந்த உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ட்ராபெர்ரி உண்ணும் தோனி:

தற்போது போட்டிகளில் இருந்து ஓய்வான நிலையில் தோனி தற்போது விவசாயத்தில் தீவிரமாக இறங்கியுள்ளார். சமீபத்தில் தோனி தோட்டத்தில் விளைந்த காய்கறிகளை அவர் துபாய்க்கு ஏற்றுமதி செய்துள்ளார் என்ற தகவல் வெளியானது. ஏற்றுமதி செய்யும் அளவிற்கு தோனி தோட்டத்தில் காய்கறிகள் உள்ளது. அந்த அளவிற்கு தோனியும் விவசாயத்தில் இறங்கி வேலை செய்து வருகிறார்.

948478 screenshot20210108 170832instagram

தற்போது அவர் ஓர் விடியோவை வெளியிட்டுள்ளார். அதில் தன் பண்ணையில் ஸ்ட்ராபெர்ரி செடிகளில் பழங்கள் இருப்பதை பார்த்த தோனி அதனை பறித்து உண்டார். இந்த விடியோவை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. மேலும் அவர் நகைச்சுவையாக ஓர் கருத்தை கூறியுள்ளார், அது என்னவென்றால், “தான் தினமும் இதே போல் பண்ணைக்கு சென்று உண்டால் ஒரு ஸ்ட்ராபெர்ரி கூட மிஞ்சாது” என்று கூறியுள்ளார்.

Back to top button
error: Content is protected !!