வேலைவாய்ப்பு

தமிழில் எழுத, படிக்க தெரிந்தால் போதும் அரசு வேலை – வாங்க விண்ணப்பிக்கலாம்!!!

ஈரோடு மாவட்டம் நசியனுர் பேரூராட்சியில் காலியாக உள்ள தூய்மை பணியாளர்‌ பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 15.09.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நிறுவனம் – ஈரோடு மாவட்டம் நசியனுர் பேரூராட்சி
பணியின் பெயர் – தூய்மை பணியாளர்‌
பணியிடங்கள் – 02
விண்ணப்பிக்க கடைசி தேதி – 15.09.2021
விண்ணப்பிக்கும் முறை – Offline

காலிப்பணியிடங்கள்:

மேற்கண்ட பேரூராட்சியில் தூய்மை பணியாளர்‌ பதவிக்கு ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் வயதானது 21 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

தமிழகத்தில் எழுத படிக்க தெரிந்தவர்கள் தூய்மை பணியாளர்‌ பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல் முறை:

இப்பணிக்கு விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல்பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்படி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்‌ 15-09-2021 தேதிக்குள்‌ அறிவிப்பில் உள்ள முகவரிக்கு பதிவஞ்சல்‌ வாயிலாக விண்ணப்பம்‌ கிடைக்கப்பெற வேண்டும்‌.

நிபந்தனைகள்‌:

  1. விண்ணப்பங்கள்‌ பதிவஞ்சலில்‌ மட்டுமே அனுப்பி வைக்கப்பட வேண்டும்‌. நேரில்‌ அளிக்கும்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்‌ கொள்ளப்பட மாட்டாது.
  2. நிர்ணயிக்கப்பட்ட நாளில்‌ நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு பின்னர்‌ பெறப்படும்‌
    விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
  3. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல்‌ குறித்த விவரம்‌ பதிவஞ்சல்‌ வாயிலாக தெரிவிக்கப்படும்‌.

இதையும் படிங்க:  TATA Motors நிறுவன வேலை – பட்டதாரிகளுக்கான சூப்பர் வாய்ப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: