ஆரோக்கியம்தமிழ்நாடு

ஆட்டுக்கறி வாங்க போறீங்களா? அப்போ இத படிச்சிட்டு போங்க..!

நீங்கள் கறி வாங்கச் செல்லும்போது, தொடை, சந்துக் கறிகளைக் கேட்டு வாங்குவீர்கள். ஏனெனில், அப்பகுதிகளில் சதை அதிகமாக இருக்கும். எனினும் இப்பகுதி இறைச்சி சற்றுக் கடினமாக இருக்கும்.

பொதுவாக நடமாடும்போது அதிகமாக அசையும் தசைகள் கடினமாக இருக்கும். மாறாக நெஞ்சுப் பகுதி மற்றும் முதுகுப் பகுதித் தசைகள் மென்மையாக இருக்கும். இதனை அறிந்த நீங்கள் வாங்கினால் சிறப்பாக இருக்கும்.

cover 1550923277

மேலும், நீங்கள் வாங்கும் இறைச்சி நல்ல தரமானதுதானா என்பதனை அறிய இறைச்சியில் தேங்கி இருக்கும் இரத்த அளவே அளவுகோல். நல்ல உடல் நலத்துடன் கூடிய ஆடு வெட்டப்படும் போது இரத்தம் முழுவதுமாக வடிந்து விடுவதால், இறைச்சியில் தேங்கி இருக்காது.

ஆனால் நோயுற்ற ஆடுகளில் சிறிது இரத்தம் தேங்கியிருக்கும். இறந்து போன பின் அறுத்துத் தொங்கவிட்டிருந்தால் இரத்தம் முழுவதும் இறைச்சியில் படிந்திருக்கும். ஒரே வயதான ஆண், பெண் ஆடுகளில் பெட்டை ஆட்டு இறைச்சியே நன்றாக இருக்கும்.

1 1550923372

வெள்ளாட்டு இறைச்சியில் உள்ள சத்துப் பொருட்கள்:

ஈரப்பதம் – 74.2%

புரதம் – 21.4%

கொழுப்பு – 3.6%

தாது உப்பு – 1.1%

மாமிசத்திற்கும் சில மருத்துவக் குணங்களும் உண்டு.

சிறப்பாக ஆட்டு மாமிசத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு மருத்துவ குணம் உண்டு.

பல பகுதிகள் வாயுவை ஏற்படுத்தவும், அஜீரத்தை விளைவிக்கவும் கூடியவை என்பதால், சீரகம், மிளகு போன்ற பொருட்களைக் கலந்து இவற்றைச் சமைக்க வேண்டும்.

8 1550923448

ஆட்டின் தலை:

இதயம் சம்பந்தமான பிணியை நீக்கும். குடலுக்குப் பலத்தைக் கொடுக்கும். கபால பிணிகளைப் போக்கும்.

கழுத்துக்கறி:

மிகவும் மென்மையாகவும், சுவையாகவும் இருக்கும். குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும், மெல்லுவதற்கு ஏற்றது. முக்கியமாக இதில் கொழுப்பு இருக்காது.

ஆட்டின் கண்:

கண்களுக்கு மிகுந்த பலத்தைக் கொடுக்கும். பார்வை துலங்கும்.

12 1550923486

ஆட்டின் மார்பு:

கபத்தை அறுக்கும். மார்புக்குப் பலத்தைக் கொடுக்கும். மார்புப் பாகத்தில் புண் இருந்தால் ஆற்றும்.

ஆட்டின் இதயம்:

தைரியம் உண்டாக்கும். மன ஆற்றலைப் பெருக்கும். இதயத்திற்குப் பலம் தரும்.

ஆட்டின் நாக்கு:

சூட்டை அகற்றும். தோலுக்குப் பசுமை தந்து பளபளப்பாக்கும்.

15 1550923508

ஆட்டின் மூளை:

கண் குளிர்ச்சி பெறும். தாது விருத்தி உண்டாக்கும். புத்தி தெளிவடையும். நினைவாற்றல் அதிகரிக்கும். மூளை பாகத்திற்கு நல்ல பலத்தைத் தரும்.

ஆட்டின் நுரையீரல்:

உடலின் வெப்பத்தை ஆற்றிக் குளிர்ச்சியை உண்டாக்கும். நுரையீரலுக்கு மிகுந்த வலு தரும்.

14 1550923502

ஆட்டுக் கொழுப்பு:

இடுப்புப் பாகத்திற்கு நல்ல பலம் தரும். எவ்வித இரணத்தையும் ஆற்றும்.

அம்மை மற்றும் அக்கி நோய்களுக்கு சரியான நிவாரணியாகும்.

17 1550923525

ஆட்டுக்கால்கள்:

எலும்புக்குப் பலம் தரும். தைரியம் ஏற்படுத்தும். கால்களுக்கு ஆற்றல் தரும்.

ஆட்டுக் குடல்:

வயிற்றில் உள்ள குடல் புண்களை ஆற்றும் சக்தி ஆட்டுக் குடலுக்கு உண்டு.

Back to top button
error: Content is protected !!