ஆரோக்கியம்தமிழ்நாடு

உங்களுக்கு 20 வயது ஆகிவிட்டதா? அப்போ இந்த விஷயத்தை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்

தற்போதைய காலக்கட்டத்தில் வாழ்க்கை எல்லோருக்கும் பரபரப்பாகவே செல்கிறது.

இதன் காரணமாக பலரும் தங்கள் ஆரோக்கியத்தில் சரியாக கவனம் செலுத்துவதில்லை.

நம் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த, சில நல்ல பழக்கங்களை கடைபிடிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

உணவில் கவனம் தேவை

அன்றாடம் ஜங்க் புட் எனும் ஆரோக்கியம் குறைவான உணவுகளை தவிர்த்து, ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட்டு வந்தால், உடல் ரீதியாக ஏற்படும் ஆரோக்கிய குறைபாடுகளின் ஆபத்தை தடுக்கலாம்.

க்ரீன் டீ

க்ரீன் டீயில் ஆன்டி- ஆக்ஸிடன்டுகள் அதிகமாக நிறைந்துள்ளதால், அதை 20 வயதில் இருந்தே குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். சுவைக்காக சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் தேன் ஆகியவற்றைக் கலந்துக் கொள்ளலாம்.

உடற்பயிற்சி

தினமும் காலையில் உடற்பயிற்சி செய்வது மிகவும் அவசியம் என்பதால், 20 முதல் 40 நிமிடம் நடை அல்லது ஒட்டம் போன்ற பயிற்சிகளை செய்ய வேண்டும்.

இதனால் உடலின் ரத்த ஓட்டம் அதிகரித்து இதயத்தின் ஆரோக்கியம் மேம்படுவதுடன், உடல் பருமன் பிரச்சனைகள் வராமல் தடுக்கப்படும்.

சரும பராமரிப்பு

ஆரோக்கியமான சருமம், நல்ல புத்துணர்வை தருவதால், சருமத்தின் மீது அதிக அக்கறை கொள்வது மிகவும் அவசியம்.

ஒவ்வொரு பருவத்திலும் சரும மாற்றம் ஏற்படுவதால், 20 வயதில் இருந்தே சருமத்தை சுத்தம் செய்தல், இறந்த செல்களை நீக்குதல் போன்றவற்றை தவறாமல் செய்ய வேண்டும்.

யோகாசனம்

தினமும் நீங்கள் யோகாவை ஒரு பயிற்சியாக செய்து வர வெண்டும். இதனால் மன அழுத்தப் பிரச்சனையில் இருந்து விடுபட்டு இளமையாக இருக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: