தமிழ்நாடு

ரேஷன் கார்டில் இல்லத்தரசியின் புகைப்படம் இருந்தால் தான் ரூ.1000 ரூபாய் ஆ? இதோ முழு விவரம்!!

தமிழகத்தில் முக ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் இல்லத்தரசிகளுக்கு 1000 ரூபாய் உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த திட்டம் எந்த வித ரேஷன் அட்டைதார்களுக்கு பொருந்தும் என்பது தொடர்பாக பொதுமக்கள் இடையே குழப்பங்கள் நீடிக்கிறது.

தமிழகத்தில் அரசின் உதவிகள் மற்றும் சலுகைகள் போன்றவற்றை ரேஷன் கடைகள் மூலமாக தான் வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் தற்போது புதிதாக ஆட்சி அமைத்துள்ள திமுக கட்சி தேர்தல் அறிக்கையின் போது ரேஷன் அட்டை வைத்துள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இத்திட்டத்தின் மூலம் பயன் பெற ரேஷன் அட்டையில் குடும்பத் தலைவியின் புகைப்படம் இருக்க வேண்டும் என்ற வதந்தி தமிழகம் முழுவதும் பரவியது. இதனால் பலரும் தங்களது ரேஷன் அட்டையில் இந்த மாற்றத்தினை செய்து வந்தனர். இதனால் இந்த திட்டம் யாருக்கெல்லாம் பொருந்தும் என்பது குறித்து பல்வேறு வித அதிகாரபூர்வமற்ற தகவல்கள் உள்ளன. அதன்படி, தமிழகத்தில் வழங்கப்பட்டுள்ள 5 வெவ்வேறு அட்டைகளில் அரிசி வழங்கப்படும் அட்டைகளான PHH, PHH – AAY மற்றும் NPHH ஆகிய அட்டைதாரர்களுக்கு மட்டுமே மாதந்தோறும் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர மற்ற இரு அட்டைகளான NPHH – S மற்றும் NPHH – NC ஆகியவற்றிற்கு 1000 ரூபாய் வழங்கப்பட மாட்டாது என்று கூறப்பட்டுள்ளது. பொதுமக்கள் ரேஷன் கடைகள் மூலம் மாத உதவித்தொகை குறித்து தேவையில்லாத வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அதன் உண்மை தன்மை தெரியாமல் பகிர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதே போல் ரூ.1000 உதவித்தொகை பெற ரேஷன் கார்டு அட்டையில் இல்லத்தரசியின் புகைப்படம் இருக்க வேண்டும் என்ற செய்திகள் பரவியது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதற்கு அவசியமில்லை எனவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: